×
 

பஞ்சாப்பில் அதிர்ச்சி..!! தீப்பிடித்து எரிந்த ரயில்.. பதறியடித்து ஓடிய பயணிகள்..!!

பஞ்சாப்பில் இன்று காலை பயணிகள் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அமிர்தசரஸ்-சஹர்சா கரீப் ரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு ஏசி பெட்டி முற்றிலும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக, ரயில்வே அதிகாரிகளின் விரைந்த செயல் மற்றும் பயணிகளின் உஷாரான தன்மை காரணமாக பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இவ்விபத்தில் லேசான காயங்களுடன் இரண்டு பயணிகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 7:30 மணிக்கு சர் ஹிந்த் ரயில் நிலையத்தின் அருகில் நடந்தது. அமிர்தசரஸில் இருந்து சஹர்சா நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் எண் 12204-ன் 19-ஆம் எண் ஏசி பெட்டியில் திடீரென ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது. பெட்டியில் பயணம் செய்தவர்கள் திடுக்கிட்டு அலறிய நிலையில், அருகில் இருந்த பயணி ஒருவர் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக அவசர சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார். இதனால், தீ பரவுவதற்கு முன்பே அனைத்து பயணிகளும் பாதுகாப்பான பெட்டிகளுக்கு இடம்பெயர்க்கப்பட்டனர்.

இதையும் படிங்க: நெருங்கும் தீபாவளி..!! சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநிலத்தவர்கள்.. தெற்கு ரயில்வேயின் அதிரடி உத்தரவு என்ன..?

ரயில்வே ரெயிலி ராஜ்குமார் தெரிவித்தபடி, "புகை தெரிந்ததும் உடனடியாக ரயிலை நிறுத்தி, பயணிகளை வெளியேற்றினோம். தீயணைப்பு படையுடன் இணைந்து 20 நிமிடங்களுக்குள் தீயை அணைத்தோம். பெட்டி முழுவதும் சேதமடைந்தாலும், உயிரிழப்பு இல்லை என்று கூறினார். இதேபோல் லுதியானாவைச் சேர்ந்த பயணி ஒருவர் கூறுகையில், "19-ஆம் பெட்டியில் திடீரென புகை கிளம்பியது. அனைவரும் அலறியடித்துக்கொண்டு மற்றொரு பெட்டிக்கு ஓடினோம். சங்கிலி இழுக்கப்பட்டதால் தான் அனைவரும் தப்பினோம்," என்றார்.

இவ்விபத்தில் லேசான சுவாசக் கோளாறுடன் இரண்டு பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு பிரிவினர் தீ விபத்தின் காரணம் ஷார்ட் சர்க்கிட்டாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். சமீப காலங்களில் ரயில்களில் ஏற்படும் மின்சாரக் கோளாறுகள் அதிகரித்துள்ளன என்பதால், தீவிர விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் முதலமைச்சர் பக்வாந்த் சிங் மான், "பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விபத்து குறித்து விரிவான அறிக்கை தயாரிக்கப்படும்," எனத் தெரிவித்தார். இந்த விபத்து, இந்திய ரயில்வேயின் பழைய பாதுகாப்பு பிரச்சினைகளை மீண்டும் நினைவூட்டுகிறது. 2018-ல் அம்ரித்சரில் நடந்த ரயில் விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நினைவு இன்னும் புதிதாக உள்ளது. இருப்பினும், இன்றைய சம்பவத்தில் ரயில்வே ஊழியர்களின் திறமையால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.

பயணிகள் சங்கங்கள், ரயில்களில் மின்சார பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என கோரியுள்ளன. இந்த விபத்து ரயில்வேயின் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அடுத்தடுத்த விபத்துகளைத் தடுக்க, மின்சார பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: எடப்பாடி கொடுத்த அல்வா தான் எல்லாம்... அதிமுக துண்டு துண்டா போச்சே! அமைச்சர் சேகர்பாபு பதிலடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share