×
 

விடிந்ததுமே இடியை இறங்கிய மத்திய அரசு... நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உச்சக்கட்ட உயர்வு...!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிரடியாக உயர்ந்திருக்கிறது.  

 கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி சிக்கன நடவடிக்கைக்கு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். மக்கள் பொது போக்குவரத்து மற்றம் மின்சார வாகனங்களை பயன்படுத்தி பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். மட்டுமல்லாது நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டை மிச்சப்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தியிருந்தார். 

இந்நிலையில் நாடு முழுவதும் இன்று எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை ஒரேயடியாக உயர்த்தியுள்ளனர். தமிழகத்தில் தற்போது பெட்ரோல் டீசல் விலை என்பது உயர்ந்திருக்கிறது. தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் இருக்கக்கூடிய பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை என்பது உயர்த்தப்பட்டிருப்பதாக அறிவிப்பானது வெளியிடப்பட்டிருக்கிறது. பெட்ரோல் டீசல் விலையை பொறுத்தமட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகே மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில்ஒரு லிட்டர் பெட்ரோல் 3 ரூபாய் 10 காசுகள் உயர்ந்து 103 ரூபாய் 90 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 3 ரூபாய் 08 காசுகள் உயர்ந்து 95 ரூபாய் 47 காசுகளுக்கு விற்பனையாகிறது. 

இதேபோல் இந்தியாவில் பெருவாரியான நகரங்கள் குறிப்பாக டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட மற்ற பிற நகரங்களிலும் லிட்டருக்கு 3 ரூபாய் வரைக்கும் அதிகபட்சமாக பல்வேறு நகரங்களில இந்த பெட்ரோல் டீசல் விலை என்பது உயர்ந்திருப்பதாக அறிய முடிகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கிடைப்பதில் தொடர்ந்து ஏற்பட்டிருக்கக்கூடிய சிக்கல், வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக பெட்ரோல், டீசல் விலை என்பது தற்போது அந்த எல்பிஜி தொடர்ந்து கிடைப்பது என்பது தாமதம் ஏற்பட்டிருக்கிறது. 

இதையும் படிங்க: “எப்ப வேணுன்னாலும் தவெக ஆட்சி கவிழலாம்...” - ம.செ.க்களுக்கு ஹைஅலர்ட் கொடுத்த மு.க.ஸ்டாலின்...!

எனவேதான் இந்த பெட்ரோல், டீசல் விலை என்பது உயர்ந்திருப்பதாக அறிய முடிகிறது. குறிப்பாக பெருநகரங்களில் பெட்ரோல் டீசல் விலை என்பது பெருவாரியாக அதிகரித்திருக்கிறது. டெல்லியைப் பொறுத்தவரை   பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரித்து 97 ரூபாய் 77 காசுகளுக்கும், கொல்கத்தாவில் 3 ரூபாய் 29 காசுகள் உயர்ந்து 108 ரூபாய் 74 காசுகளுக்கும், மும்பையில் 3 ரூபாய் 14 காசுகள் உயர்ந்து 106 ரூபாய் 68 காசுகளுக்கும் விற்பனையாகி வருகிறது. 

இதேபோல் டெல்லியில் டீசல் விலையும் லிட்டருக்கு 3 ரூபாய் உயர்ந்து 90 ரூபாய் 67 காசுகளுக்கும், கொல்கத்தாவில் 3 ரூபாய் 11 காசுகள் உயர்ந்து 95 ரூபாய் 13 காசுகளுக்கும், மும்பையில் 3 ரூபாய் 11 காசுகள் உயர்ந்து 93 ரூபாய் 14 காசுகளுக்கும் விற்பனையாகிறது. 

இதையும் படிங்க: அம்மா ஆத்மாதான் இபிஎஸ்-க்கு தண்டனை கொடுத்துள்ளது! அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share