×
 

எம் மக்களை கொன்ற பாகிஸ்தானுக்கு நிதி கொடுப்பீர்களா? போர் தணிந்து விடுமா? உமர் அப்துல்லா சரமாரி கேள்வி...

பாகிஸ்தானுக்கு நிதி உதவி கொடுத்தால் போர் பதற்றம் எப்படி குறையும் என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

பகல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தி சில தீவிரவாதிகளை கொன்றது. ஆனால் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் பொதுமக்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது அதனை இந்தியா முறியடித்து வருவதுடன் பாகிஸ்தானின் பல இடங்களில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவின் பதிலடி தாக்குதலால் பொருளாதார சேவை சந்தித்துள்ள பாகிஸ்தான் நிதி உதவி கோரியது.

பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியும் நிதி அளிக்கக்கூடாது என்று இந்தியா கடும் இதற்கு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு புதிய கடல்கள் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தில் நடந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி ரூ.8,542 கோடியை பாகிஸ்தானுக்கு கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: சோணமுத்தா போச்சா! வான்டடாக வந்து மண்ணை கவ்வும் பாகிஸ்தான்…பூந்து விளாசும் இந்தியா!

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்கும் சர்வதேச நாடுகள், சர்வதேச நாணய நிதியத்திற்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி கொடுத்தால் போர் பதற்றம் எப்படி குறையும் என்ற கேள்வி எழுப்பினார்.

தாக்குதல்களுக்கு இந்தியா பதில் தாக்குதல் மட்டுமே நடத்தி வருவதாகவும் இந்தியாவின் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகள் நிதி கொடுத்து உதவுவதற்கு தனது கண்டனத்தையும் பதிவு செய்தார்.

இதையும் படிங்க: கண்குத்தி பாம்பாக கண்காணிக்கும் போலீஸ்..! மால்களுக்கு பலத்த பாதுகாப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share