பொதுத் தேர்வு மசோதா கண்துடைப்பு நாடகம்...! பெல்லட் குண்டு பிரச்சனை... கவுரவ் கோகாய் விளாசல்..!
பொதுத் தேர்வு மசோதா கண்துடைப்பு நாடகம் என கவுரவ் கோகாய் தெரிவித்தார்.
சமீபகாலத்தில் NEET-UG உள்ளிட்ட முக்கிய போட்டித் தேர்வுகளில் ஏற்பட்ட பேப்பர் லீக் சர்ச்சைகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்த போராட்டங்கள் இந்த மசோதாவுக்கான அடிப்படையாக அமைந்தன. மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், தேர்வு முறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் இந்த திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மத்திய அமைச்சரவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பின்னர், மக்களவையின் சட்டப்பணி நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த திருத்த மசோதா தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான தண்டனைகளை வழங்கவும், விசாரணை மற்றும் வழக்குகளை விரைவுபடுத்தவும் உருவாக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள், ஏற்பாட்டுக் கும்பல்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் பல பிரிவுகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. மசோதா விசாரணையை விரைவுபடுத்த பல முக்கிய ஏற்பாடுகளைச் செய்கிறது.
பேப்பர் லீக் வழக்குகளில் விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். மத்திய அரசு தேவைப்படும் இடங்களில் சிறப்பு பணிக்குழு அமைக்கலாம். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒவ்வொன்றிலும் சிறப்பு ஃபாஸ்ட் டிராக் நீதிமன்றங்களை அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றங்கள் தினசரி விசாரணை நடத்தி, சார்ஜ் ஷீட் தாக்கல் செய்த மூன்று மாதங்களுக்குள் வழக்கை முடிக்க வேண்டும். மேல்முறையீடுகளும் விரைவாக முடிக்கப்படும்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் முடங்கிய நாடாளுமன்றம்.. 2 மணி வரை ஒத்திவைப்பு..!!
மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியது. இது தொடர்பான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. மசோதா தொடர்பான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கவுரவ் கோகாய், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து பேசினார். பொதுத்தேர்வு சீர்திருத்த மசோதா கண்துடைப்பு நாடகம் என தெரிவித்துள்ளார். போராடியவர்கள் மீது தடியடி பெல்லட் குண்டுகள் வீச்சு என கடுமையான முறையில் போலீசார் தாக்கி இருப்பதாக தெரிவித்தார். பெல்லட் குண்டு பயன்படுத்த அனுமதி தந்தது யார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: மாணவர்கள் மீதான தாக்குதல் எதிரொலி! கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அமளி! முடங்கியது நாடாளுமன்றம்!