அரசு பள்ளி அருகே புதர்களில் கிடந்த ஜெலட்டின் குச்சிகள்... மோப்ப நாய்கள் கொண்டு தீவிர சோதனை...!
உத்தரகாண்டில் அரசு பள்ளி அருகே கிடந்த ஜெலட்டின் குச்சிகளை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜெலட்டின் வெடிபொருள் என்பது நைட்ரோகிளிசரின் (Nitroglycerin) என்ற மிக ஆற்றல் வாய்ந்த வெடிபொருளை ஜெலட்டின் போன்ற பசையான பொருளுடன் கலந்து, அதனை நிலையாகவும், கையாளுவதற்கு ஏதுவாகவும் மாற்றியமைத்து தயாரிக்கப்படும் ஒரு பிளாஸ்டிக் வெடிபொருள் ஆகும். இதில் பொதுவாக 90-92% நைட்ரோகிளிசரின், சிறிதளவு நைட்ரோசெல்லுலோஸ் (Nitrocellulose), மரத்தூள், சோடியம் நைட்ரேட் போன்ற பொருட்கள் கலந்திருக்கும்.
இவை நீண்ட குச்சி வடிவில் இருக்கும். சட்டவிரோதமாகக் கையாண்டால் அது பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதமாக மாறிவிடும். உத்தரகாண்டில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றின் அருகே 20 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்டில் உள்ள அல்மோரா மாவட்டத்தின் சுல்ட் பகுதியில் உள்ள தபாரா கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகிலுள்ள புதர்களில் ஜெலட்டின் குச்சிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. பள்ளி முதல்வர் சுபாஷ் சிங் புதர்களில் சந்தேகத்திற்கிடமான பொட்டலங்களை பார்த்ததும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: வெட்டி காவு குடுங்க அவன..! என் பிள்ளை துடிச்சு துடிச்சு செத்துடுச்சே... கதறும் உறவினர்கள்..!
தகவலறிந்து வந்த போலீசார் புதர்களில் இருந்து 161 ஜெலட்டின் குச்சிகளை போலீசார் மீட்டு உள்ளனர். தொடர்ந்து போலீசார் இரண்டு குழுக்களாக ஆய்வு செய்தனர். மேலும், வெடிகுண்டு அகற்றும் படை மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: எங்க புள்ளைய கொன்னுட்டானே பாவி... உறவினர்கள் போராட்டம்... முற்றுகை..!