×
 

ஜனநாயகம், தேர்தல் உதவி நிறுவனத்தின் தலைவராகும் ஞானேஷ்குமார்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவனத்திற்கான தலைவராக ஞானேஷ் குமார் பொறுப்பேற்க உள்ளார்.

சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவனம் உலகளாவிய ரீதியில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான அரசுகள் இடையிலான அமைப்பாகும். இது 1995-ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் தலைமையகத்துடன் நிறுவப்பட்டது. இந்நிறுவனம், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல், தேர்தல் செயல்முறைகளை நம்பத்தக்கதாகவும் உள்ளடக்கியதாகவும் ஆக்குதல், அரசியல் பங்கேற்பை ஊக்குவித்தல் ஆகியவற்றில் தனித் திறன் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையைப் போலவே அரசியல் நோக்கம் கொண்டதாக இல்லாமல், தொழில்முறை ரீதியாகவும் நடுநிலையாகவும் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையின் விளைவாகவே இந்நிறுவனம் பிறந்தது.

ஜனநாயகத்தை வலுப்படுத்த 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட IIDEA என்பது இந்தியா உட்பட 35 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு மன்றம். பார்வையாளர் நாடுகளாக அமெரிக்காவும், ஜப்பானும் இந்த அமைப்பில் பங்கேற்கின்றன. தற்போது தலைமைப் பொறுப்பை வகிக்கும் சுவிட்சர்லாந்து, 2026க்கான பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்க இருக்கிறது.

இந்த நிலையில், சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவனத்திற்கான 2026 இன் தலைவராக இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பொறுப்பேற்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: அதிபர் டிரம்ப் கொடுத்த பிரமாண்ட விருந்தில் பிரபலங்கள்..!! யார் யார் தெரியுமா..??

டிசம்பர் 3 ஆம் தேதி அமெரிக்காவின் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் ஞானேஷ் குமார் புதிய பொறுப்பை ஏற்க உள்ளார். ஞானேஷ் குமார் 2026 வரை தலைவராக அனைத்து கவுன்சில் கூட்டங்களுக்கும் தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதையும் படிங்க: 200 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா..!! இதுல ஒரு கேங்ஸ்டர் இருக்காரு..!! யார் தெரியுமா..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share