×
 

நள்ளிரவில் வெடித்து சிதறிய சிலிண்டர்!! 25 பேர் உடல் கருகி பலியான சோகம்!! கோவா துயரம்!

வடக்கு கோவாவில் செயல்பட்டு வந்த இரவு விடுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

வடக்கு கோவாவின் பிரபல சுற்றுலாத் தலமான பாகா கடற்கரை அருகே செயல்பட்டு வந்த இரவு விடுதியில் ஏற்பட்ட கொடூர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நேற்று நள்ளிரவுக்குப் பிறகு நிகழ்ந்தது.

கோவா மாநிலம், வடக்கு கோவா மாவட்டம், அர்போரா கிராமத்தில் உள்ள பாகா பகுதியில் பிரபலமாக இயங்கி வந்த “டைட்டோஸ்” என்ற இரவு விடுதியில் திடீரென தீ வெடித்தது. சமையல் அறையில் தொடங்கிய தீ வேகமாக பரவி முழு கட்டடத்தையும் தாக்கியது. அப்போது உள்ளே இருந்த சுற்றுலாப் பயணிகள், ஊழியர்கள் என ஏராளமானோர் தீயில் சிக்கினர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீயின் வேகம் காரணமாக பலர் உயிரிழந்தனர். இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக கோவா காவல்துறை தலைவர் அலோக் குமார் உறுதி செய்துள்ளார். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: 'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' - டிச.8-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சம்பவ இடத்தை கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ மைக்கேல் லோபோ ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

 

The fire mishap in Arpora, Goa is deeply saddening. My thoughts are with all those who have lost their loved ones. May the injured recover at the earliest. Spoke to Goa CM Dr. Pramod Sawant Ji about the situation. The State Government is providing all possible assistance to those…

— Narendra Modi (@narendramodi) December 7, 2025

இந்த சோக சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக வருத்தம் தெரிவித்தார். தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்ட அவர், “கோவாவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

மேலும், உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-ம் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அறிவித்தார். மாநில அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

கோவாவின் சுற்றுலாத் தலமான பாகா கடற்கரையில் நிகழ்ந்த இந்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: IND vs SA: ஜெயஸ்வால் சதம், கோலி, ரோஹித் மிரட்டல்! ODI தொடரைக் கைப்பற்றி இந்தியா அபார வெற்றி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share