Google நிறுவனத்தின் 1 GW Data Centre..! அடிக்கல் நாட்டிய சந்திரபாபு நாயுடு..!
Google நிறுவனத்தின் 1 GW டேட்டா சென்டருக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்.
விசாகப்பட்டினத்தில் ரூ.1.4 லட்சம் கோடி முதலீட்டில் Google நிறுவனத்தின் 1 GW திறன் கொண்ட டேட்டா சென்டர் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த மிகப்பெரிய திட்டம் ஆந்திரப் பிரதேசத்தின் தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.அமெரிக்காவுக்கு வெளியே Google-ன் மிகப்பெரிய AI ஹப் இதுவாகும். சுமார் 600 ஏக்கர் பரப்பளவில், தார்லுவாடா, அடவிவாரம் மற்றும் ராம்பில்லி உள்ளிட்ட பகுதிகளில் இந்த டேட்டா சென்டர் கட்டமைக்கப்பட உள்ளது.
முதலில் 1 ஜிகாவாட் திறனுடன் தொடங்கும் இந்த மையம், எதிர்காலத்தில் 6.5 GW வரை விரிவாக்கம் செய்யப்படும் இலக்குடன் திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் ஜிகாவாட் அளவிலான ஹைபர்ஸ்கேல் டேட்டா சென்டராகவும், Google-ன் இந்தியாவுக்கான முதல் AI ஹப்பாகவும் கருதப்படுகிறது.
விசாகப்பட்டினத்தின் தார்லுவாடா பகுதியில் இன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் ஆந்திர முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், Google Cloud CEO தாமஸ் குரியன் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர். இந்த திட்டத்திற்கான MoU கடந்த 2025 அக்டோபரில் கையெழுத்தானது.
இதையும் படிங்க: இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!! ஜவுளி, விவசாயம், இறைச்சி ஏற்றுமதி என் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்!
அப்போது ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆந்திர IT அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.இந்த முதலீடு 15 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2026 முதல் 2030 வரை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
இதையும் படிங்க: மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..! பக்தர்களுக்கு தடபுடல் விருந்து..!