#BREAKING நிர்வாணப்படுத்தி, பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி... அரசு பள்ளி மாணவனுக்கு சக மாணவர்கள் கொடுத்த பாலியல் டார்ச்சர்... பகீர் பின்னணி...!
அரசுப் பள்ளி மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே விளாத்திகுளம் கல்வி வட்டாரத்தில் உள்ள தருவைகுளம் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவனை, சக மாணவர்கள் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. வகுப்பறைக்குள் அந்த குறிப்பிட்ட மாணவனை நிர்வாணமாக்கி, ரப்பர் பேண்ட், ஸ்கேல் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி பின்புறத்தில் காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், மிளகாய்ப் பொடியைத் தூவியும், பபுள்கம் போன்றவற்றை அவர் மீது ஒட்டி வைத்தும் பல்வேறு வகையான துன்புறுத்தல்களை அந்தப் பள்ளி மாணவனுக்கு சக மாணவர்கள் அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளியே கூறினாலோ, வீட்டில் தெரிவித்தாலோ மேலும் அதிகமான துன்புறுத்தல்களைச் சந்திக்க நேரிடும் என அந்த மாணவனை மிரட்டியதால், அவர் இதை யாரிடமும் தெரிவிக்காமல் மறைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கூட்டு பாலியல் தொல்லை... சிறுமியை சீண்டிய சிறுவர்கள் உட்பட 5 பேரை கொத்தாக தூக்கிய காவல்துறை...!
இந்த நிலையில், அந்த மாணவனுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்ததை அடுத்து, அவரது வகுப்பு ஆசிரியை சந்தேகமடைந்து விசாரித்துள்ளார். பின்னர், உடனடியாக அந்த மாணவனின் தாயை பள்ளிக்கு வரவழைத்து, மாணவனுக்கு நடந்த சம்பவம் குறித்து ஆசிரியை தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மாணவனின் தாயார் தலைமை ஆசிரியரைச் சந்தித்து பேசியபோது, “இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம். இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். மாணவனின் உடல்நிலை சரியாகும் வரை விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள்” என தலைமை ஆசிரியர் கூறியதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், மனவேதனையிலும் விரக்தியிலும் இருந்த அந்த மாணவனின் தாயார், தூத்துக்குடி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில், காவல் ஆய்வாளர் மங்கையற்கரசி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு முதலே அந்த மாணவன் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிறுமியிடம் அத்துமீறல்..! பிரபல தொழிலதிபரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..! பரபரப்பு..!!