×
 

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை... மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..!

தேசிய சுகாதார ஆணையம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும். மாநில காவல்துறை, மருத்துவமனைகள் மற்றும் மாநில சுகாதார நிறுவனத்துடன் இணைந்து செயல்படும்.

"சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மத்திய அரசு ஒரு பெரிய நிவாரணத்தை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமில்லா சிகிச்சை திட்டத்தை அறிவித்து மத்திய அரசு இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் அரசிதழ் அறிவிப்பின்படி, இந்தத் திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்டவர் விபத்து நடந்த தேதியில் இருந்து ஏழு நாட்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட எந்த மருத்துவமனையிலும் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சையின் பலனைப் பெறலாம்.

இந்தத் திட்டம் மே 5, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி, "எந்தவொரு சாலையிலும் மோட்டார் வாகனத்தால் ஏற்படும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட எவருக்கும் இந்தத் திட்டத்தின் விதிகளின் கீழ் பணமில்லா சிகிச்சைக்கு உரிமை உண்டு. இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில், மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் குறித்து கவலை தெரிவித்து, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுபோன்ற ஒரு திட்டத்தை விரைவில் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அறிவித்தார்.

இதையும் படிங்க: திருப்பதி அருகே நிகழ்ந்த கோர விபத்து.. 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

 

தேசிய சுகாதார ஆணையம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும். மாநில காவல்துறை, மருத்துவமனைகள் மற்றும் மாநில சுகாதார நிறுவனத்துடன் இணைந்து செயல்படும். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். அதே நேரத்தில், சுமார் 4 லட்சம் பேர் படுகாயமடைகிறார்கள். ஒரு அவர்களில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள்.

இதையும் படிங்க: தடம் புரண்டு விபத்துக்குள்ளான மின்சார ரயில்.. உயிர் தப்பிய பயணிகள்.. சென்னையில் பரபரப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share