ஈரான் போரால் LPG தட்டுப்பாடு..!! முதல்ல இத செய்ங்க.. இல்லனா கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும்..!! மத்திய அரசு வார்னிங்..!!
தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான ஒரு எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறது மத்திய அரசு.
ஈரான்-இஸ்ரேல் இடையிலான போர் நீடிப்பால் வளைகுடா பகுதியில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், இந்தியாவுக்கு எல்பிஜி (திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு) இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஒரு மாதமாக தொடரும் இந்த போர் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் கொண்டு வரும் கப்பல்கள் தாமதமாகி வருகின்றன. இதனால் இந்தியாவின் எல்பிஜி இறக்குமதி மார்ச் மாதத்தில் சுமார் 46 சதவீதம் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். வீட்டு உபயோகத்துக்கு முன்னுரிமை அளித்து வரும் அரசு, வணிக நோக்கிலான சிலிண்டர் விநியோகத்தை முதலில் நிறுத்தியது.
இந்த தட்டுப்பாட்டால் உணவகங்கள், ஹோட்டல்கள், டீ-காபி கடைகள் உள்ளிட்டவை பல இடங்களில் மூடப்பட்டுள்ளன. உணவு வகைகள், டீ, காபி உள்ளிட்டவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆட்டோக்கள், உற்பத்தி நிறுவனங்கள், துணி ஆலைகள் என பல்வேறு துறைகளில் எல்பிஜி கிடைக்காமல் தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் திண்டாடுகின்றனர். சில இடங்களில் கருப்பு சந்தையில் சிலிண்டர் விலை ஆயிரக்கணக்கில் விற்கப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
இதையும் படிங்க: குறைக்கப்படுகிறதா வீட்டு உபயோக சிலிண்டரின் எடை..?? மத்திய அரசு சொல்வது என்ன..??
இந்த சூழலில் மத்திய அரசு பொதுமக்களுக்கு உறுதியளித்து வருகிறது. “நாட்டில் போதுமான எல்பிஜி இருப்பு உள்ளது. பதற்றம் அடைய வேண்டாம்” என அறிவித்து வரும் அரசு, வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை அளித்து வருவதாகக் கூறுகிறது. ஆனால், தட்டுப்பாட்டை நீண்டகால அடிப்படையில் சமாளிக்க ஒரு முக்கியமான நடவடிக்கையை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் எடுத்துள்ளது.
குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG - Piped Natural Gas) இணைப்பு வசதி உள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்கள், தங்கள் எல்பிஜி இணைப்பை PNG-க்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. PNG இணைப்புக்கு வசதி இருந்தும் அதற்கு மாற மறுக்கும் வீடுகளுக்கு, அடுத்த மூன்று மாதங்களுக்குள் எல்பிஜி சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள ‘நேச்சுரல் கேஸ் அண்ட் பெட்ரோலியம் ப்ராடக்ட்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் ஆர்டர் 2026’-ன் கீழ், PNG இணைப்பு இருக்கும் இடங்களில் எல்பிஜி சிலிண்டர் வைத்திருப்பது அல்லது புதிய சிலிண்டர் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது. இரு இணைப்புகளும் உள்ளவர்கள் எல்பிஜியை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். வீட்டு சங்கங்கள் அல்லது குடியிருப்புகள் PNG குழாய் பதிக்க அனுமதி மறுத்தால் அங்கும் எல்பிஜி விநியோகம் நிறுத்தப்படலாம்.
இந்த நடவடிக்கை ஒரே எரிபொருளை மட்டும் சார்ந்திருப்பதை குறைத்து, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவை அதிகம் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதாக அரசு தெரிவித்துள்ளது. PNG உள்நாட்டு உற்பத்தியால் தடையின்றி கிடைக்கும் என்பதால், தட்டுப்பாடு இல்லாமல் சீரான விநியோகம் உறுதி செய்யப்படும். வசதி இல்லாத பகுதிகளில் மட்டுமே எல்பிஜி விநியோகம் தொடரும்.
வணிக நோக்கில் எல்பிஜி பயன்படுத்துவோரும், PNG வசதி இருந்தால் அதற்கு மாறலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த மாற்றத்தால் எரிபொருள் பாதுகாப்பு வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் PNG இணைப்புக்கு விரைவாக விண்ணப்பிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: உரிமை கோரப்படாத வைப்பு நிதிகள்: இந்திய வங்கிகளில் கிடந்த ஆயிரக்கணக்கான கோடி RBI-க்கு மாற்றம்..!! மத்திய அரசு அதிரடி..!!