காந்தியின் பேரன், அண்ணாவின் மகன்! மாநிலங்களவையில் கமல்ஹாசன் ஆற்றிய கன்னி பேச்சு!
மாநிலங்களவையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் எம்.பி-யுமான கமல்ஹாசன் தனது முதல் உரையை ஆற்றியனார்.
இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று ஒரு வரலாற்றுத் தருணம் அரங்கேறியது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் அவர்கள் இன்று தனது கன்னிப் பேச்சை நிகழ்த்தினார். பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், திராவிட இயக்கத் தலைவர்களையும், மகாத்மா காந்தியையும் தனது ஆசான்களாகக் குறிப்பிட்டு ஆற்றிய உரை அவையில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
பரமக்குடியிலிருந்து வந்துள்ள நான், இன்று எனது ஆசிரியர்களில் ஒருவரானப் பேரறிஞர் அண்ணா உரையாற்றிய இதே அவையில் நின்று பேசுவதை மகா பாக்கியமாகக் கருதுகிறேன். எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்தவர்களில் அண்ணாவும் ஒருவர். நாடாளுமன்றத்தை நான் புரிந்து கொள்ள அவர் எனக்கு உதவினார் என்று கூறித் தனது உரையைத் தொடங்கினார். மேலும், தனக்கு இந்த வாய்ப்பளித்தத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் அவர் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். எனது உரையைத் தெளிவாக எழுதப் பெரியார் எனக்கு உதவினார்; கோபப்படாமல் பேசுவதற்கு மகாத்மா காந்தி எனக்குக் கற்றுக்கொடுத்தார். உங்கள் முன்னால் நிற்கும் இந்த நபர் மகாத்மா காந்தி மற்றும் பெரியார் என்னும் மாபெரும் ஆசான்களின் பேரனும், அண்ணா என்னும் மாமனிதனின் மகனும் ஆவான் என்று அவர் முழங்கியபோது அவையில் கரவொலி அடங்க நீண்ட நேரம் பிடித்தது.
இந்தியா என்பது மாநிலங்களால் இணைந்த ஒரு நாடு. எங்கள் மொழிக்கு எதிரான எந்த விதமான ஆக்கிரமிப்புகள் நடந்தாலும், அதனை நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள அண்ணா எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்தத் துணிச்சலோடு ஒரு தமிழனாக எனது கருத்துகளை இங்கே முன்வைக்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: அரசியலில் திருப்பம்: உதயசூரியனா..?? டார்ச்லைட்டா..!! ஸ்டாலினை சந்திக்கப்போகும் கமல்ஹாசன்..??
பள்ளிக்கூடத்தில் இருந்து இடைநிற்றல் செய்த ஒருவன் பொருளாதாரம் குறித்துப் பேசுவதா என நீங்கள் ஐயம் கொள்ளலாம். ஆனால், புள்ளிவிவரங்களுடன் பேசுவதற்குப் பெரியார் எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளார். எனது மனதில் மையம் கொண்டுள்ளப் புயலிலிருந்து வரும் இந்த வார்த்தைகள் உங்களில் சிலருக்குக் காயத்தை ஏற்படுத்தலாம், ஆனால் அவை உண்மைகள்" என்று பட்ஜெட் மீதானத் தனது விமர்சனங்களை முன்வைத்தார்.
இதையும் படிங்க: கமல்ஹாசனின் பெயர், போட்டோக்களை யூஸ் பண்ணக்கூடாது..!! கறார் காட்டிய ஐகோர்ட்..!!