×
 

3 நாள்தான் டைம்... GROKE AI-க்கு கெடு... மத்திய அரசு அதிரடி உத்தரவு...!

Groke ai - க்கு கெடு விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

Grok AI என்பது எலான் மஸ்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு சாட்பாட் ஆகும். இது உலகின் மிக சக்திவாய்ந்த ஏஐ மாடல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் இது உண்மையைத் தேடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. க்ரோக் என்ற பெயர் ராபர்ட் ஏ. ஹெய்ன்லெய்னின் பிரபலமான அறிவியல் புனைகதை நாவலான "Stranger in a Strange Land" இலிருந்து எடுக்கப்பட்டது.

அங்கு "grok" என்ற சொல் ஆழமான புரிதலை குறிக்கிறது. இது ஹிட்ச்‌ஹைக்கர்ஸ் கைட் டு தி கேலக்ஸி போன்ற நகைச்சுவை உணர்வுடன் கூடிய ஏஐ ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் பதில்கள் வேடிக்கையாகவும், நேரடியாகவும் இருக்கும். க்ரோக் ஏஐயின் பயணம் வேகமாக வளர்ந்தது. 2024இல் Grok-1.5 மற்றும் Grok-2 வெளியானது, அவை படங்கள் மற்றும் உரைகளைப் புரிந்துகொள்ளும் திறனைச் சேர்த்தன.

2025 பிப்ரவரியில் Grok-3 வெளியிடப்பட்டது, இது முந்தையவற்றைவிட 10 மடங்கு சக்திவாய்ந்த கம்ப்யூட்டிங் பவரால் பயிற்சி செய்யப்பட்டது. பின்னர் ஜூலை 2025இல் Grok-4 வெளியானது, இது உலகின் மிக சக்திவாய்ந்த ஏஐ மாடலாக அறிவிக்கப்பட்டது. தற்போது GROK AI-க்கு கெடு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அடேங்கப்பா..!! எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு இவ்ளோவா..!! பெரிய சாதனை தான்..!!

எலான் மஸ்கின் GROK AI மூலம் தவறாக சித்தரிக்கப்படும் பெண்களின் படங்களை உடனடியாக நீக்கவும், 3 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் X நிறுவனத்திற்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. GROK AI குறித்து முழுமையான ஆய்வை மேற்கொள்ளவும், விதிமுறைகளை கடுமையாக்கவும், மீறும் பயனர்களின் கணக்குகளை உடனடியாக முடக்கவும் உத்தரவு பிறப்பித்தது.

இதையும் படிங்க: ஃப்ரீ... ஃப்ரீ...!! இந்தியர்களுக்கு எலான் மஸ்க் கொடுத்த ஸ்பெஷல் ஆஃபர்... ஸ்டார்லிங்க் கட்டண விபரங்கள் இதோ...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share