விண்ணை கிழித்து பாய்ந்தது GSLV F17... இந்தியாவின் முதல் படப்பிடிப்பு செயற்கைக்கோள் EOS-5 என்னென்ன செய்யும் தெரியுமா?
ஜிஎஸ்எல்வி எப்-07 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்திருக்கிறது. திட்டமிட்டபடி செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால், இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், அதிகாலை 2.55 மணிக்கு ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட் மூலம் ஜிஐசாட்-5 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. இது வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து, திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
சரியாக அதிகாலை 2.55 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், அதன்பிறகு சுமார் 30 நிமிடங்களுக்குள்ளாகவே புவிநிலை சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோள் சரியாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!
வழக்கமான புவி சுற்றுவட்டப் பாதைக்கு பதிலாக, பூமியிலிருந்து சுமார் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள புவிநிலை சுற்றுவட்டப் பாதையில் ஜிஐசாட்-5 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியத் துணைக்கண்டத்தின் மீது நிலைத்திருக்கும் வகையில் இது செயல்பட உள்ளது. மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமராக்கள் மூலம் இந்தியாவின் நிலப்பரப்பைத் தொடர்ந்து கண்காணித்து, உடனுக்குடன் துல்லியமான படங்களை வழங்கும் வகையில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. கவுன்ட்டவுன் நேற்று இரவு தொடங்கி, தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளால் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் இன்று அதிகாலை 2.55 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த ராக்கெட்டைப் பொறுத்தவரை, நாட்டின் நிலப்பரப்பை நிகழ்நேரத்தில் படம்பிடிக்கும் வகையிலும், வெள்ளம், காட்டுத்தீ, புயல் உள்ளிட்ட பேரிடர்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு, உடனுக்குடன் பூமிக்கு தகவல்களை வழங்கும் வகையிலும் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை செயல்பட்டு, விண்வெளியில் இருந்து தரவுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட்டைப் பொறுத்தவரை, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, கிரையோஜெனிக் என்ஜின் மூலம் அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை ஆழமான விண்வெளிப் பாதைக்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்த ராக்கெட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் பரந்த நிலப்பரப்பு மற்றும் நீண்ட கடலோரப் பகுதிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க இது எல்லைப் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருக்கும் என்றும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவிநிலை சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால், இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!