விளையாட்டு நிகழ்ச்சிகள் நல்வாய்ப்பை உருவாக்கும்... கேலோ இந்தியா நிறைவு விழாவில் ஜி.வி பிரகாஷ் நெகிழ்ச்சி...!
விளையாட்டு நிகழ்ச்சிகள் வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் என இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தெரிவித்தார்.
கேலோ இந்தியா மற்றும் பிட் இந்தியா இயக்கங்களின் கீழ் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் சன்சாத் கேல் மஹோத்சவ்-2025 (Sansad Khel Mahotsav-2025) விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழா, இந்தியாவின் விளையாட்டுத் துறையில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் “கேலோ இந்தியா” மற்றும் “பிட் இந்தியா” திட்டங்களால் ஈர்க்கப்பட்ட இந்த மஹோத்சவ், அடிமட்ட மட்டத்தில் விளையாட்டுத் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாடு முழுவதிலுமுள்ள ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் நடைபெற்ற இந்தப் போட்டிகள், இளைஞர்களிடையே உடற்தகுதி, ஒழுக்கம் மற்றும் குழுப்பணியை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியுள்ளன. செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கிய இந்த மஹோத்சவ், பல மாதங்களாக பல்வேறு தொகுதிகளில் உள்ளூர் போட்டிகளாக நடைபெற்று வந்தது. கபடி, கால்பந்து, வாலிபால், தடகளம், கோ-கோ உள்ளிட்ட பல விளையாட்டுகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர்.
கிராமப்புறங்களில் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர்வதோடு, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிப்பதே இதன் முக்கியக் குறிக்கோள். பல தொகுதிகளில் லட்சக்கணக்கான பங்கேற்பாளர்கள் இதில் இணைந்து, இது ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. கேலோ இந்தியா & பிட் இந்தியா சார்பில் SPORTS MAHOTSAV-2025 விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்துக் கொண்டார்.
இதையும் படிங்க: நயினாருக்கு எரிச்சலா? திமுகவின் இந்துமத வெறுப்பு... பதிலடி கொடுத்த தமிழிக பாஜக...!
அப்போது, விளையாட்டு நிகழ்ச்சிகள் நம்முடைய இளைஞர்களுக்கு தேவை என்றும் உலக அரங்கில் வெற்றி பெற நல்ல வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும் எனவும் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் தெரிவித்தார். இந்த போட்டிகளை நடத்த கூடிய பிரதமர் மோடி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோருக்கு நன்றி என்றும் பி.டி.உஷா மேடம் நிறைய பேருக்கு முன் மாதிரி என்றும் கலந்து கொண்டதற்கு நன்றி எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கேரளா டூ தமிழ்நாடு நோ என்ட்ரி! பறவை காய்ச்சலால் எல்லையில் கெடுபிடி! பொது சுகாதாரத்துறை அதிரடி!