அத அப்புறம் பாக்கலாம்!! H-1B விசா விவகாரம்!! இந்தியர்களுக்கான நேர்காணலை ஒத்திவைத்தது அமெரிக்கா!
H-1B விசாவுக்கு விண்ணப்பித்துள்ள இந்தியர்களுக்கான நேர்காணலை அமெரிக்க தூதரகம் அடுத்தாண்டுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
சென்னை: அமெரிக்காவில் வேலை செய்யப் போகும் இந்தியர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி கொடுக்கும் செய்தி வெளியாகியுள்ளது. H-1B விசா நேர்காணல் டிசம்பர் மாதத்தில் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த லட்சக்கணக்கான இந்தியர்களின் அப்பாயின்ட்மென்ட் முழுவதும் 2026 மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகமும் கான்சுலேட்களும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
ஏன் இப்படி ஒத்திவைத்தார்கள்?
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த புதிய விதி தான் காரணம். இனிமேல் H-1B விசா விண்ணப்பிப்பவர்களின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், X (ட்விட்டர்), லிங்க்டின் எல்லா சோஷியல் மீடியா கணக்குகளையும் அமெரிக்க அரசு முழுமையாகச் சோதிக்கப் போகிறது.
யாராவது அமெரிக்காவைத் திட்டியோ, பயங்கரவாதத்துக்கு ஆதரவாகவோ, அரசுக்கு எதிராகவோ பதிவு போட்டிருந்தால் உடனே விசா நிராகரிப்பு! இந்தச் சோதனைக்கு நிறைய நேரம் வேண்டும் என்பதால் டிசம்பர் முழுவதும் நேர்காணல்களை நிறுத்திவிட்டார்கள்.
இதையும் படிங்க: எந்த ஷா வந்தால் என்ன? கருப்பு சிவப்பு படை பாடம் புகட்டும்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!
யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள்?
இந்தியாவில் இருந்து ஒவ்வொரு வருடமும் 70% H-1B விசா இந்தியர்களுக்குத்தான் போகுது. TCS, இன்ஃபோசிஸ், விப்ரோ, காக்னிசண்ட் போன்ற பெரிய IT நிறுவனங்களின் ஊழியர்கள், சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் – இவர்கள் எல்லாரும் இப்போது தவித்து நிற்கிறார்கள்.
“என் நேர்காணல் டிசம்பர் 18-க்கு இருந்தது. இப்போ மார்ச் 2026-க்கு மாற்றிட்டாங்க. அமெரிக்காவில் ஜாயின் பண்ண வேண்டிய வேலை என்ன ஆகுமோ?” என்று ஒரு இன்ஜினியர் வருத்தமாகச் சொல்கிறார்.
என்னென்ன புது விதிகள் வந்திருக்கின்றன?
- சோஷியல் மீடியா கணக்குகளை முழுமையாகச் சோதனை செய்வார்கள்.
- அமெரிக்காவுக்கு எதிரான பதிவு இருந்தால் விசா ரத்து.
- H-1B விசா கட்டணம் 89 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
- சமீபத்தில் ஆப்கானிஸ்தான் நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் 19 நாடுகளுக்கு விசா முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
என்ன செய்யலாம்?
தூதரகம் சொல்கிறது: “பழைய தேதியில் வந்தால் உள்ளே விட மாட்டோம். புதிய தேதி மெயிலில் வரும்.”
விண்ணப்பதாரர்கள் இப்போது என்ன செய்யலாம்?
- உங்கள் ஃபேஸ்புக், X, இன்ஸ்டா எல்லாத்தையும் சுத்தம் செய்யுங்கள்.
- அமெரிக்காவைத் திட்டிய பதிவு, அரசியல் பதிவு இருந்தால் டிலீட் செய்யுங்கள்.
- புதிய அப்பாயின்ட்மென்ட் தேதி வரும் வரை பொறுமையாகக் காத்திருங்கள்.
இந்திய IT துறைக்கு இது பெரிய பின்னடைவு. அமெரிக்காவில் ஜாயின் பண்ண வேண்டிய ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இப்போது தவிப்பில் இருக்கிறார்கள். “என் கனவு வேலை என்ன ஆகுமோ?” என்று பலர் கவலையோடு கேட்கிறார்கள். டிரம்ப் சொல்வது ஒன்று தான் – “அமெரிக்கா ஃபர்ஸ்ட்”. ஆனால் இந்தியர்களைப் பொறுத்தவரை இது “விசா லாஸ்ட்” ஆகிவிடுமோ என்ற பயம் தான்!
இதையும் படிங்க: ஆதார் அட்டையில் பெயர் மாற்றத்திற்கு இனி பான் கார்டு செல்லாது..!! UIDAI அறிவிப்பு..!!