தி.மலையில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை... பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் வாக்குவாதம்..!!
திருவண்ணாமலையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கண்டித்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றம். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது.
இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் தொல்லை பெரும் சமூக பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில், திருவண்ணாமலை செங்கம் அருகே உள்ள பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் மாணிக்கவேல். இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.
இதையும் படிங்க: செங்கல் சூளையில் வட மாநில பெண் வன்கொடுமை..! திமுகவுக்கு சமாதி கட்டுற நேரம் வந்துருச்சு..! கொந்தளித்த நயினார்
தலைமை ஆசிரியர் உள்ளிட்டோரிடம் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அறிவியல் ஆசிரியர் மாணிக்கவேலை நேரில் வரவழைக்காமல் பள்ளி நிர்வாகம் துணை போவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். அறிவியலாசிரியர் மாணிக்கவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Flying kiss கூட பாலியல் தொல்லை தான்..! 61 வயது முதியவர் மீதான வழக்கில் சண்டிகர் நீதிமன்றம் உத்தரவு..!