×
 

கல்லூரி வளாகத்திலேயே நடந்த கொடூரம்… மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை…!

மேற்கு வங்கத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை இன்றும் ஒரு மிகுந்த சமூக பிரச்சனையாகத் திகழ்கிறது. சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை எல்லா வயது பெண்களும் பாதிக்கப்படுவது பாதுகாப்பு என்ற சொல்லையே கேள்விக்கு ஆளாக்குகிறது. 

தேசிய குற்றப் பதிவு அமைப்பின் 2021 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் ஒரு நாளுக்கு சராசரியாக 86 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன. அதாவது ஒரு மணி நேரத்திற்கு 49 பெண்கள் இத்தகைய வன்முறைக்கு ஆளாகின்றனர். இந்த எண்ணிக்கை 2020-இல் 28,046-ஆக இருந்து 2021-இல் 31,677-ஆக உயர்ந்துள்ளது. அதாவது 13% அதிகரித்து உள்ளது. 

மேற்குவங்கம் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி வளாகத்திலேயே நடந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. கல்லூரி வளாகத்தில் ஆண் நண்பருடன் இருந்த மாணவி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வீடியோ அனுப்புறியா? இன்டர்னல் மார்க்ல கை வைக்கவா.. பாலியல் தொல்லை குறித்து மாணவியின் அதிர்ச்சியூட்டும் ஆடியோ..!

பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடந்து வருகிறது. கல்வி இடங்கள் கூட பாதுகாப்பற்றவை என்பதை இது வெளிப்படுத்துவதாக கூறப்பட்டு வருகிறது. மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சக மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொல்கத்தாவில் கடந்த ஆண்டு பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது பெண்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்குகிறது. 

இதையும் படிங்க: மானக்கேடு... போலீஸ்காரர்களே பெண்ணை சீரழித்த கொடூரம்... சீமான் ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share