×
 

66 வயது மூதாட்டியை வன்கொடுமை செய்ய முயற்சி..!! இளைஞர்கள் போதையில் அட்ராசிட்டி..!!

சேலத்தில் 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இரண்டு மாத குழந்தையிலிருந்து 80 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக எதிர் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

அதற்கு ஏற்றார் போல் பல்வேறு குற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குற்றவாளியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். ஒவ்வொரு குற்ற சம்பவத்தில் ஈரம் காய்வதற்குள் மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்வது ஒருவிதமான பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்த நிலையில், சேலம் மாவட்டம் கோரிமேடு அருகே 66 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி கீழே தள்ளி போதையில் இளைஞர்கள் அவரின் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. மூதாட்டி கத்தி கூச்சல் போட்டதால் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மூதாட்டி சேலம் அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: #BREAKING: சேலம் விஜய் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி உயிரிழப்பு..! பேரதிர்ச்சி..!

இதனிடையே மூதாட்டியிடம் அத்துமீறிய இரண்டு பேரில் ஒருவரான ரவிக்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பிச்சென்ற மற்றொரு நபரை பிடிக்க போலீசார் முனைப்பு காட்டியுள்ளனர். மூதாட்டி என்று கூட பாராமல் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

இதையும் படிங்க: சேலம் TVK பிரச்சாரத்தில் உற்சாகம்.. சாட்டையை சுழற்றிய விஜய்... தொண்டர்கள் செம்ம குஷி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share