×
 

மகளிருக்கு இனி மாதம் ரூ.1000 இல்லை ரூ.2,500 வழங்கப்படும்... முதல்வர் அதிரடி அறிவிப்பு...!

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை அறிவித்தார்.

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் எந்த ஊதியமும் பெறாமல் குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், வீட்டில் உடலுழைப்பை செலுத்தும் பெண்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. சமீபத்தில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 1.30 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்தின் கீழ், பெண்களின் வங்கி கணக்கிற்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குக் குறைவாகவும், குறிப்பிட்ட நில அளவைக் கொண்ட குடும்பத் தலைவிகளும் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான நிதி 1000-யில் இருந்து உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்திருந்தார். 

இதேபோல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. மார்ச் 2025ம் முதல் அரசு மஞ்சள் நிற ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக அறிவித்தது. அண்டை மாநிலமான புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது.இதன் கீழ், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த தொகையை விரைவில் ரூ.2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: “முடியாதுன்னீங்க... பாஜக, அதிமுக முகத்துல கரியை பூசிட்டோம் இல்ல...” - திமுக அமைச்சர் உற்சாகம்...!


புதுச்சேரியில் முதியோர் உதவி தொகை 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.  மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை அறிவித்தார். இதேபோல் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ.1000 விரைவில் 2500 ரூபாயாக  உயர்த்தி வழங்கப்படும் எனக்கூறினார். 

இதையும் படிங்க: அடிதூள்... விடுபட்ட மகளிருக்கு 3ம் கட்டமாக உரிமைத் தொகை வழங்கப்படும்... அமைச்சர் சொன்ன குட்நியூஸ் ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share