மசூத் அசார் தலைமையகம் முதல் பயிற்சி கூடம் வரை... வாஷ் அவுட் ஆக்கிய இந்திய ராணுவம்..!!
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய் முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் தலமையகம் மற்றும் தீவிரவாத பயிற்சிக்கூட்டங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகள் பயன்படுத்திய முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. மேலும், பாகிஸ்தான் நிலப்பரப்பில் உள்ள 4 முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 முகாம்கள் தாக்கப்பட்டன. பஹவல்பூர் (ஜெய்ஸ்-இ-முகமது தலைமையகம்), முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்), கோட்லி (தற்கொலை தாக்குதல் பயிற்சி முகாம்), முசாபராபாத் (இறக்குமதி முகாம்), பர்னாலா (லஷ்கர் ஆதரவு முகாம்), சியால்கோட் (ஹிஸ்புல் முஜாஹிதீன் பயிற்சி முகாம்) ஆகியவை இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தாக்குதலுக்கு அடங்காத பாக்., எல்லையில் அத்துமீறி தாக்குதல்.. பலியான அப்பாவி மக்கள்!!
இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ஜெய் முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேரும் அவரது ஆதரவாளர்கள் நான்கு பேரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில் அசாரின் மூத்த சகோதரி உட்பட அவரது முழு குடும்பமும் கொல்லப்பட்டனர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் 10 பேர் தாக்குதலில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. மசூத் அசார் வெளியிட்ட அறிக்கையில், பஹாவல்பூரில் உள்ள ஜாமியா மஸ்ஜித் சுப்ஹான் அல்லா முகாம் மீதான தாக்குதலில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
இறந்தவர்களில் அசாரின் மூத்த சகோதரி மற்றும் அவரது கணவர், ஒரு மருமகன் மற்றும் அவரது மனைவி, மற்றொரு மருமகள் மற்றும் அவரது நீட்டிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் அடங்குவர். அசாரின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவர், அவரது தாயார் மற்றும் இரண்டு நெருங்கிய உதவியாளர்கள் தாக்குதலில் உயிரிழந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அசாரின் தலைமையகம் மற்றும் பஹாவல்பூரில் இருந்த தீவிர வாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சிக் கூடம் ஆகியவை அழிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் தாக்குதல் நியாயமானது.. ஆதரவு தெரிவித்த முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்!!