தமிழகம் முழுவதும் 5 நாட்கள் அடித்து ஊற்றப்போகும் கனமழை!! சென்னையில் வீசும் வெப்ப அலை! கலவையான வானிலை!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு மற்றும் வட மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை மறுநாள் 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்கும்.
இதையும் படிங்க: அடித்து ஊற்றக் காத்திருக்கு கனமழை!! 6 மாவட்டங்களுக்கு பறந்தது அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை!
வரும் 25-ம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், 26-ம் தேதி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் மக்களுக்கு விடுத்துள்ள அறிவுப் படியில், கனமழை பெய்யும் பகுதிகளில் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடித்து ஊற்றக் காத்திருக்கு கனமழை!! 6 மாவட்டங்களுக்கு பறந்தது அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை!