×
 

சொத்து விவரங்கள்..! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!

அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக முன்னாள் அமைச்சர்களான டி. ஜெயக்குமார் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்குகள், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் சொத்து விவரங்களை மறைத்ததாகக் கூறி, வருமான வரித் துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டவை ஆகும்.

ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரான டி. ஜெயக்குமார் மீதான வழக்கை ராயபுரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் தொடுத்திருந்தார். அந்த மனுவில், ஜெயக்குமார் தனது சொத்து மதிப்பு ரூ.70.73 லட்சம் என்று குறிப்பிட்டிருந்தும், அதன் விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இதேபோல், மைலம் தொகுதி அதிமுக வேட்பாளரான சி.வி. சண்முகம் மீதான மனுவில், அவரது சொத்து மதிப்பு முந்தைய காலத்தில் ரூ.12.08 லட்சமாக இருந்து, தற்போது ரூ.60.64 லட்சமாக உயர்ந்துள்ளது நியாயமானதாகத் தெரியவில்லை என்றும், சொத்து விவரங்களில் முரண்பாடுகள் உள்ளன என்றும் வாதிடப்பட்டது.

இந்த இரு மனுக்களும், வேட்பு மனுக்களில் சொத்து விவரங்களை மறைத்ததாகக் கூறி வருமான வரித் துறைக்கு விசாரணை உத்தரவிடக் கோரியவை.இதேபோன்ற கோரிக்கையுடன், அதிமுகவின் மற்ற முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்ளிட்டோர் மற்றும் பாஜக வேட்பாளர்கள் சிலருக்கு எதிராகவும் தனித்தனியே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதையும் படிங்க: இந்த சமூகத்தில் தான் குறை..! திருநங்கை மறுவாழ்வு திட்டம்..! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அந்தந்த தொகுதி வாக்காளர்கள் சார்பில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, அவை தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜெயக்குமார் மற்றும் சண்முகம் ஆகியோருக்கு எதிரான குறிப்பிட்ட மனுக்களை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

 

இதையும் படிங்க: பட்டியலின மாணவர்கள் மர்ம மரணம்... தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share