எஸ்.பி.வேலுமணிக்கு பறந்த வந்த குட்நியூஸ்... நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் கொண்டாட்டத்தில் அதிமுகவினர்...!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வேட்ப மனுவில் முதலீடுகள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட தகவல்கள் மறைக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தக்கூடிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. கோவையை சேர்ந்த வாக்காளர் விக்னேஸ்வரன் என்பவர் தாக்கல் செய்திருக்கக்கூடிய இந்த மனுவில் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி 2021 ஆம் ஆண்டு சட்டமன்றம் போது தாக்கல் செய்த அந்த சொத்து விவரங்களை தற்போது ஒப்பிடும் போது அதிக அளவில் இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் அவர் தாக்கல் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது வேலுமணியின் சொத்து விவரங்கள் அதிகரித்துள்ளன. இது தொடர்பான ஆதாரங்களை அவர் தனது வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை. குறிப்பாக வேலுமணியின் முதலீடுகள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் தற்போதைய வேட்புமனுவில் மறைக்கப்பட்டுள்ளன. எனவே, வேலுமணியின் வருமானம் மற்றும் சொத்து விவரங்கள், முதலீடுகள் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார்.
எஸ்.பி.வேலுமணியின் சொத்து விவரங்களில் உண்மை தன்மை மறைக்கப்பட்டதா என தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உத்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கி அமர்வு வேட்புமனுவில் தெரிவித்திருந்த சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று கூறி எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: “சொந்தக் கட்சிக்காரர்களையே காப்பாத்த முடியல...” - விஜய் இமேஜை டோட்டலாக காலி செய்த எஸ்.பி. வேலுமணி...!
இதையும் படிங்க: ஒரே BALL-ல் 2 விக்கெட் காலி... கோவை தெற்கில் திமுக, தவெகவுக்கு எஸ்.பி.வேலுமணி வைத்த செக்...!