ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லையா... இதெல்லாம் நியாயமா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி...!
வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் ரோடு சோ நடத்த அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்தது.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல்களை நோக்கி அரசியல் களமிறங்கிய விஜய், த.வெ.க. என்ற பெயரில் தனது கட்சியைப் பதிவு செய்து, பரப்புரைப் பயணங்களைத் தொடங்கினார். செப்டம்பர் 13 அன்று தொடங்கிய இந்தப் பயணம், சனிக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கான பயணம் செப்டம்பர் 27 அன்று தொடங்கியது. கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பொது மேடை நிகழ்ச்சி, விஜய்யின் ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் ஆர்வத்தால் பெரும் கூட்டத்தை ஈர்த்தது.
ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது.விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் உற்சாக சுற்றுப் பயணம் அனைவரையும் சோக கடலில் ஆழ்த்தியது. கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது
இந்த நிலையில், வழிகாட்டு விதிகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. விதிகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் ரோடு நடத்த அனுமதி தரப்படாது என்ற உத்தரவு அடிப்படை உரிமையை பறிப்பது ஆகாதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு முடிவு அரசியல் கட்சிகளின் அடிப்படை உரிமைகளை பறிப்பது போல் ஆகாதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் SIR... பாஜக அழுகுணி ஆட்டம் எங்க கிட்ட பலிக்காது... திமுக விளாசல்...!
அப்போது எந்த கட்சியும் பொதுக்கூட்டம் நடத்துவதில் இருந்து தடுக்கப்படவில்லை எனவும் தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது அனைத்து கட்சிகளுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார். விதிகள் வகுக்கும் வரை பரப்புரைக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த எந்த தடையும் இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கோவில் நிதியில் வணிக வளாகம்? ... உடனே சுற்றறிக்கை அனுப்புங்க... அறநிலையத்துறைக்கு அதிரடி உத்தரவு...!