×
 

VIP தரிசனத்துக்கு தனி நேரம் ஒதுக்க முடியாதா..? தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி..!!

தமிழக கோவில்களில் விஐபி தரிசனம் குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தின் பல புகழ்பெற்ற கோவில்களில், குறிப்பாக பெரிய கோவில்களில், பொதுப் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலையில், விஐபிக்களுக்கும் சிறப்புக் கட்டண தரிசனத்துக்கும் தனி ஏற்பாடுகள் செய்யப்படுவது நீண்டகாலமாக விவாதப் பொருளாக உள்ளது. இந்த முறை பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

சமீபத்தில், விஸ்வ இந்து பரிஷத் வட தமிழகத் தலைவர் பி. சொக்கலிங்கம் தாக்கல் செய்த மனுவில், தமிழக அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களில் சிறப்புக் கட்டண தரிசனம், விஐபி தரிசனம் மற்றும் பிரேக் தரிசனம் போன்ற அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் அறநிலையத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் கோரியது.

அப்போது, பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் எழுப்பி உள்ளது .“கடவுளுக்கு முன் அனைவரும் சமம். விஐபி தரிசனம் எதற்காக தேவை?” என்று கேட்டுள்ளது. சனாதன தர்மம் பணம் அல்லது அந்தஸ்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதில்லை என்று மனுதாரர் வாதிட்டார். பக்தர்கள் கடவுளை வழிபட வரும் போது, பணக்காரர்-ஏழை, விஐபி-பொதுமக்கள் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது என்ற கருத்தை நீதிமன்றமும் ஆதரிப்பதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: குழந்தைகளை வைத்து பிரச்சாரமா.? என்ன நடந்துச்சு.? தவெக, தேர்தல் ஆணையத்துக்கு பறந்த உத்தரவு..!!

 “கோவில்களில் கடவுள் மட்டுமே விஐபி. விஐபிக்கள் பொதுப் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அது பாவம்” என்று ஏற்கெனவே வந்த வழக்கு தீர்ப்பில் கூறப்பட்டது. தமிழக கோவில்களில் விஐபி தரிசனத்துக்காக தனி நேரத்தை ஏன் ஒதுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அப்போது, 

பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்கவே சிறப்பு தரிசனம் எனும் பெயரில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என தமிழக அரசு பதிலளித்தது. வாதங்களை கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு 6 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதையும் படிங்க: கோவை கொடூரம்..! சிறுமி கொலை வழக்கில் SIT கோரி வழக்கு..! ஹைகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share