கொளுத்தும் வெயில்..! இதை செய்யவே கூடாது..! நெடுஞ்சாலைப் பணிகளுக்கு ரெஸ்ட்ரிக்ஷன்..!
கடும் வெயில் நிலவுவதால் நெடுஞ்சாலைப் பணிகளுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முக்கியமான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளைப் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டின் பல பகுதிகளில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ளது. மதிய நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தொழிலாளர்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து NHAI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. உத்தரவின்படி, மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரையிலான நேரத்தில் நெடுஞ்சாலைப் பணிகளைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, தார் போடும் பணி உள்ளிட்ட உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் மற்றும் வெப்பம் உருவாக்கும் பணிகளை காலை நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவு ஒட்டுமொத்த தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், பராமரிப்புப் பணிகள் மற்றும் சுங்கச் சாவடிகளுக்கும் பொருந்தும். ஒப்பந்தக்காரர்கள் மற்றும் உரிமையாளர்கள் அனைவரும் தொழிலாளர்களுக்கு மாறுபட்ட பணி நேரங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: உதகை கல்லட்டி மலைப்பாதையில் அதிரடி மாற்றம்... இன்று முதல் இந்த வாகனங்கள் செல்ல தடை விதிப்பு...!
இதன் மூலம் உச்ச வெப்ப நேரத்தில் தொழிலாளர்கள் வெளியில் அதிக நேரம் இருக்காமல் பாதுகாக்கப்படுவார்கள். மேலும், தொழிலாளர்களுக்கு நிழல் பகுதிகள், போதிய குடிநீர், முதலுதவி உபகரணங்கள், ORS மற்றும் குளுக்கோஸ் போன்றவை கட்டாயம் வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை பணிகள் தீவிரம்..! தேர்தல் பார்வையாளர்கள் தமிழகம் வருகை..!!