பாகிஸ்தானில் இந்து விவசாயி சுட்டுக் கொலை!! நீதி கேட்டு வெடிக்கும் போராட்டம்!! எல்லையில் பதற்றம்!
பாகிஸ்தானில் இந்து விவசாயி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதிகோரி மனித உரிமைக் குழுக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஒரு இந்து விவசாயி கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நீதி கோரி அங்குள்ள இந்து சிறுபான்மை அமைப்புகளும், மனித உரிமைக் குழுக்களும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பான தகவல்களின்படி, சர்ஃபராஸ் நிஸாமனி என்பவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தவர் கைலாஷ் கோலி என்ற இந்து விவசாயி. இந்நிலையில், நிலம் தொடர்பான தகராறு காரணமாக நிஸாமனி கைலாஷை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் முழு விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
கைலாஷ் கோலியின் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி பல்வேறு இந்து அமைப்புகளும் மனித உரிமைக் குழுக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படிங்க: வெனிசுலா எண்ணையை இந்தியாவிற்கு விற்க தயார்!! ரஷ்யாவை கழட்டி விட ட்ரம்ப் புது ரூட்!!
கொலையாளி சர்ஃபராஸ் நிஸாமனியை உடனடியாக கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், “கைலாஷின் ரத்தம் நம்மிடம் நீதியைக் கோருகிறது. இது வெறும் ஒரு தனிநபர் கொலை மட்டுமல்ல. இது சிந்து மாகாணத்தில் வாழும் சிறுபான்மை இந்து சமூகத்தினரின் அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு மற்றும் மனிதநேயம் மீதான தாக்குதலாகும்” என்று வலியுறுத்தினர்.
இந்த சம்பவம் பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாதுகாப்பின்மை குறித்து மீண்டும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அமைப்புகளும் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: நான்தான் ஜெ. மகள்... எலக்சன்ல நிக்க போறேன்..! விரட்டி அடித்த அதிமுகவினர்..!