அமெரிக்காவிற்கு ஆப்பு... இந்தியா வரும் சீனாவின் முக்கிய புள்ளி... பிரதமர் மோடியுடன் நேரடி சந்திப்பு..!
நாளை மாலை 5:30 மணிக்கு பிரதமர் மோடியை அவரது லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் சந்திக்கவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
இன்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பின் போது, எல்லை நிலைமை, வர்த்தகம் மற்றும் விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் ஆலோசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், சீன வெளியுறவு அமைச்சரின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்தது.
2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதல்களைத் தொடர்ந்து கடுமையான நெருக்கடிக்கு உள்ளான இரு நாடுகளும் தங்கள் உறவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக வாங் யியின் வருகை பெரும்பாலும் பார்க்கப்படுகிறது. இந்தியா மீதான வரிகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவீதமாக உயர்த்தியதை தொடர்ந்து, இந்தியா-அமெரிக்க உறவுகளில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் சீனாவின் முக்கிய பிரமுகரின் இந்த வருகை உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: என்னது..!! பீகாரில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இருப்பிட சான்றா..!!
இன்று மாலை 4:15 மணியளவில் டெல்லியில் தரையிறங்கும் வாங் யி, மாலை 6 மணியளவில் இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக ஜெய்சங்கரை சந்திக்கவுள்ளார். இதற்கிடையில், நாளை காலை 11 மணிக்கு எல்லைப் பிரச்சினை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதன் பின்னர் நாளை மாலை 5:30 மணிக்கு பிரதமர் மோடியை அவரது லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் சந்திக்கவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
இதையும் படிங்க: இந்தியா மீது 20-25% இறக்குமதி வரி விதிக்கும் அமெரிக்கா..? அதிபர் டிரம்ப் சூசகம்..!!