ரூ.120 கோடியைக் கடந்த உண்டியல் காணிக்கை... திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக்கொடுத்த பக்தர்கள்...!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் மட்டும் ₹ 123 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நாளுக்கு அதிகரித்து வரும் நிலையில் உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில், சராசரியாக தினமும் சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் என 23 லட்சத்து 15 ஆயிரத்து 330 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து உண்டியலில் ரூ.123.43 கோடி காணிக்கையாக செலுத்தினர்.
இதில் 8 லட்சத்து 94 ஆயிரத்து 843 பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர். ஆகஸ்ட் 19 ஆம் தேதி, அதிகபட்சமாக உண்டியலில் ரூ.5 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 700 காணிக்கையாக கிடைத்தது, அன்று 76,033 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்.
ஆகஸ்ட் 27 ஆம் தேதி, மிகக் குறைந்த தொகையான ரூ.3.06 கோடி உண்டியலில் காணிக்கையாக வந்தது அன்று 77,185 பக்தர்கள் சாமியை தரிசித்தனர், 23,098 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
இதையும் படிங்க: பைக்கில் இருந்து கீழே விழுந்தவருக்கு உதவியவருக்கு இப்படியொரு நிலையா? - உஷார் மக்களே...!
மறுபுறம், ஆகஸ்ட் 16 ஆம் தேதி அதிகபட்சமாக 87,759 பக்தர்களும், 28ம் தேதி குறைந்தபட்சமாக 63,843 பக்தர்கள் சுவாமியையும் தரிசித்தனர்.மொத்தத்தில், ஆகஸ்ட் மாதத்தில் 23 லட்சத்து 15 ஆயிரத்து 330 பக்தர்களுக்கு ஏழுமலையானை வழிபாடு செய்தனர். 8 லட்சத்து 94 ஆயிரத்து 843 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
இதையும் படிங்க: நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்... இலவச தரிசனம் குறித்து திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு...!