×
 

ம.பி.யில் 'காந்த கண்ணழகி' மோனலிசா.. ப்பா.. கட்டுக்கடங்காத கூட்டம்..!!

மத்திய பிரதேசத்தில் கண்ணழகி மோனாலிசாவை காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில், மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த மோனாலிசா போஸ்லே என்ற இளம்பெண் தனது காந்தக் கண்களால் பெரும் பிரபலமடைந்தார். ருத்ராட்ச மாலைகள் விற்று வந்த இவர், ஒரு யூடியூபரால் வீடியோ பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானார். 

"கும்பமேளா மோனாலிசா" மற்றும் brown beauty என்று அழைக்கப்பட்ட இவரது அழகு, இளைஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வடமாநில தொலைக்காட்சிகளும் இவரை பிரபலப்படுத்தின. ஆனால், இந்த புகழ் அவருக்கு தொந்தரவையும் ஏற்படுத்தியது. செல்ஃபி எடுக்க விரும்பியவர்களின் கூட்டம் காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டதால், மோனாலிசாவும் அவரது குடும்பமும் வருத்தமடைந்தனர். இதனால், அவர் கும்பமேளாவை விட்டு சொந்த ஊருக்குத் திரும்பினார். 

இருப்பினும், சமூக வலைதளங்களில் இவரது புகழ் தொடர்ந்து வளர்ந்தது. யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவானது. பின்னர், மோனலிசா மேக்கப் செய்து, இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோக்கள் மீண்டும் வைரலாகின. அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது.

இதையும் படிங்க: Gun பாயிண்டில் பெண், 2 குழந்தைகள் கடத்தல்.. யார் அந்த கும்பல்..? ம.பி-யில் அதிர்ச்சி சம்பவம்..!

மோனலிசாவின் புகழ் பாலிவுட்டில் கால் பதிக்க வழிவகுத்தது. “டைரி ஆஃப் மணிப்பூர்” என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த பயணத்தில் சவால்களும் இருந்தன. மோனலிசா டீப்ஃபேக் தொழில்நுட்பத்தால் பாதிக்கப்பட்டார். மேலும் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு அவரை உலுக்கியது. இதைத்தொடர்ந்து கேரளாவில் நகைக்கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மலையாளம் பேசி பாராட்டுகளைப் பெற்றார். 

இந்நிலையில் மத்திய பிரதேசத்திற்கு சென்ற "கண்ணழகி" மோனாலிசாவை காண ஏராளமான மக்கள் கூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் முக்கிய நகரமான இந்தூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மோனாலிசா கலந்துகொண்டபோது, அவரைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். 

இந்தக் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. மோனாலிசாவின் தோற்றமும், அவரது எளிமையான புன்னகையும் மக்களை கவர்ந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்வு, அவரது புகழ் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

சமூக ஊடகங்களில் இந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் பரவி, மோனாலிசாவின் ரசிகர் பட்டாளம் மேலும் விரிவடைந்து வருகிறது. இந்தக் கூட்டத்தை அடுத்து, மத்திய பிரதேசத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. மோனாலிசாவின் இந்த பயணம், ஒரு சாதாரண பெண்ணின் திறமையும் அழகும் எவ்வாறு பெரும் புகழைப் பெற முடியும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது. இவரது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
 

இதையும் படிங்க: கொடநாடு வழக்கு: நீதிபதி பங்களாவை ஆய்வு செய்யலாம்.. எந்த ஆட்சேபனையும் இல்லை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share