×
 

“என் மகனுடன் உறவு கொள்ளும் வரை...” - பிராமண பெண்கள் குறித்து மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சர்ச்சை பேச்சு...!

இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிராமண பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கடும் கண்டனங்கள் குவித்து வருகிறது.

பிரமாண பெண்களை அவமதிக்கும் வகையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் பேசியுள்ளது சோசியல் மீடியாவில் வைரலானதோடு, கடும் விமர்சனங்களையும் குவித்து வருகிறது. 

மத்தியப் பிரதேசத்தில் பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) பிரிவைச் சேர்ந்த ஊழியர்களின் சங்கமான AJAKS-இன்  மாநாடு போபாலின் அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற புதிய தலைவரும், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சந்தோஷ் வர்மா, பிரமாண பெண்களை இழிபடுத்தியதாக சோசியல் மீடியாவில் பரவி  வரும் வீடியோ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

"ஒரு பிராமணர் தனது மகளை என் மகனுக்கு தானம் செய்யும் வரை அல்லது அவருடன் உறவு கொள்ளும் வரை, இட ஒதுக்கீடு தொடர வேண்டும்" என அவர் பேசியதாக கூறப்படும் கருத்தத்திற்கு பிராமண அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இதையும் படிங்க: பில்டிங் ஸ்ட்ராங்.. ஆனா பேஸ்மெண்ட் வீக்..!! தெலங்கானாவில் ஆய்வின் போதே சரிந்த குடியிருப்பு..!! வைரல் வீடியோ..!!

வர்மாவின் கருத்து அநாகரீகமானது, சாதிய வெறுப்பு மற்றும் பிராமண பெண்களை மிகவும் அவமதிக்கும் செயல் என கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மேலும் இப்படியான கருத்துக்களை கூறியதற்காக சந்தோஷ் வர்மா மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும், இல்லையென்றால் பிராமண சமாஜ் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தும் என அகில இந்திய பிராமண சமாஜத்தின் மாநிலத் தலைவர் புஷ்பேந்திர மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சந்தோஷ் வர்மா இதுபோல் சர்ச்சையில் சிக்குவது முதல் முறை கிடையாது. மத்தியப் பிரதேச மாநில நிர்வாக சேவை அதிகாரியான வர்மா, ஒரு பெண்ணை மிரட்டியதாக தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக போலி நீதிமன்ற உத்தரவுகளைத் தயாரித்ததாகவும், சிபிஐ நீதிபதியின் கையொப்பங்களைப் போலியாகப் பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதனை அவர் மாநில பணிப்பிரிவில் இருந்து ஐ.ஏ.எஸுக்கான பதவி உயர்வை பெறுவதற்காக செய்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மசோதாக்களை நிறுத்தி வச்சேனா? உண்மை என்னானு தெரியுமா? கவர்னர் - முதல்வர் சந்திப்பில் நடந்தவை என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share