×
 

ராஜா ராஜாதான்... ராஜாங்கம் தொடரட்டும்... திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து..!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இளையராஜாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

இசையால் தமிழ்நாட்டையும், தமிழர்களையும் என்றென்றும் ஆளும் இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி இசை வரையிலான அவரது பயணம், தமிழ் சினிமாவின் இசை உலகத்தை மட்டுமல்ல, உலக இசையின் வரலாற்றையே மாற்றியமைத்துள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்தச் சிறப்பு நாளில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இளையராஜாவைப் பற்றி கூறிய “ராஜா என்றும் ராஜாதான்” என்ற வார்த்தைகள், அவரது இசை மீதான அளவற்ற மரியாதையையும், அன்பையும் பிரதிபலிக்கின்றன.இளையராஜா ஜூன் 3, 1943 அன்று பன்னைப்புரத்தில் பிறந்தார். ஆனால், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்தநாளும் அதே தேதியான ஜூன் 3-ஆக இருந்ததால், தனது பிறந்தநாளைக் கொண்டாடும் விழாவை ஒரு நாள் முன்னதாக, ஜூன் 2-ஆம் தேதிக்கு மாற்றிக் கொண்டார்.

கலைஞர் அவருக்கு “இசைஞானி” என்ற பட்டத்தைச் சூட்டியதற்கான ஆழமான மரியாதையாக இந்தச் செயல் அமைந்தது. இசைஞானியின் இந்த தியாக உணர்வு, அவரது பண்பாட்டையும், தலைவர்கள் மீதான பக்தியையும் உலகுக்கு உணர்த்தியது. ஸ்டாலின் பல சந்தர்ப்பங்களில் இளையராஜாவை சந்தித்து, அவரது சாதனைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது பிறந்தநாள் நாட்களில் தொலைபேசி அழைப்பு மூலமும், நேரில் சந்தித்தும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய் தமிழினத்தின் எதிரியா..? வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்..!!

இசைஞானியின் இசை தமிழ்நாட்டின் பெருமையை உலகுக்கு எடுத்துச் செல்கிறது என்று பலமுறை வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சிகளுக்கும் அரசின் சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் இளையராஜாவுக்கு தனது வாழ்த்துகளை கூறியுள்ளார். 

இதையும் படிங்க: "வலி தந்தாலும் நியாயம் இருக்கு”..! திமுகவிற்கு எதிராக போராடாதீங்க..! திருமா. அட்வைஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share