×
 

பீர் அடிச்சுட்டு இளையராஜா போட்ட ஆட்டம் இருக்கே! பாராட்டு விழாவில் பங்கம் செய்த ரஜினிகாந்த்…

பாராட்டு விழாவில் இளையராஜா பேசிக் கொண்டிருந்தபோது குறிப்பிட்டு ரஜினிகாந்த் கிண்டலடித்தார்.

தமிழ் இசையின் ஜாம்பவான் இளையராஜா, தனது 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் செப்டம்பர் 13, 2025 அன்று சென்னையின் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழா, தமிழ் திரையுலகின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது. இசைஞானியின் சாதனைகளை கொண்டாடும் இந்த விழா, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது, மேலும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல உயர்ந்த திரைதளங்கள் பங்கேற்றனர்.

லண்டனில் நடைபெற்ற சிம்பொனி இசைநிகழ்ச்சியைத் தொடர்ந்து, இந்த பாராட்டு விழா அவரது பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் மிகப்பெரிய அளவிலான நிகழ்வாக அமைந்தது. முதல்வர் ஸ்டாலின், இளையராஜாவின் இசை தமிழின் அடையாளம் என்று பேசி, அவருக்கு நினைவு விருது வழங்கினார். கமல்ஹாசன் தனது உரையில், இளையராஜாவின் இசையை முதல்வரின் ரசனையின் அடிப்படை என்று விளக்கி, விழாவின் சிறப்பை உயர்த்தினார்.

பாராட்டு விழாவில் இளையராஜா சிம்பொனியை அரங்கேற்ற, எழுந்து நின்று கைத்தட்டி முதலமைச்சர் ஸ்டாலின் உற்சாகப்படுத்தினார். நிலம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரங்கமும் கைதட்டி உற்சாகப்படுத்தினர். இந்த நிகழ்வில், இளையராஜாவின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களைத் தொட்டு, ஒரு பீர் சம்பந்தப்பட்ட குறும்பு கதையை ரஜினிகாந்த் பகிர்ந்தது அனைவரையும் சிரிக்க வைத்தது. ஜானி படத்தின் மியூசிக் கம்போசிங்போது நான் அவருடன் இருந்தேன், அப்போது இயக்குநர் மகேந்திரன் வந்திருந்தார்.,

இதையும் படிங்க: என்னப்பா நிலவரம்? ஜெர்மனியில் இருந்தவாறு சென்னை மழை குறித்து கேட்டறிந்த முதல்வர்

நானும் மகேந்திரனும் சரக்கு அடித்தோம், சாமி நீங்கள் என்று கேட்டதற்கு தலையாட்டினார் இளையராஜா என கூறினார். ஹாஃப் பாட்டில் பீர் அடித்துவிட்டு இளையராஜா போட்ட ஆட்டம் இருக்கே என இளையராஜா பேசிக் கொண்டிருந்தபோதே குறுக்கிட்டு ரஜினிகாந்த் கிண்டலடித்து பேசினார்.

இதையும் படிங்க: முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்... குழந்தைகளுடன் உணவருந்திய முதல்வர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share