×
 

மக்களே உஷார்!! 14 மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை.. உருவானது புதிய காற்றழுத்தம்!!

வரும் 22 ஆம் தேதி அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மே 4 ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அனைவரும் வெயில் வாட்டி வதைக்கப்போகிறது என்று எண்ணிய நிலையில் ஆங்காங்கே மழை பெய்தது. இதனால் பூமி குளுமை அடைந்து வெப்பம் தணிந்தது. இந்த நிலையில் அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

வரும் 22ம் தேதி அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். தமிழகத்தில் மே 20ம் தேதி வரை மழை தொடரும். கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, பெரம்பலுார், அரியலுார், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி,தருமபுரி, திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: அடுத்த 3 மணி நேரத்துக்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை... வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்யலாம். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது அதிகாலை வேளையில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு உள்ளது.

மதிய வேளையில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னையில் காலை முதலே வானிலை ஜில் ஜில் என இருக்கிறது. இன்று காலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, புதுவையில் மாலை 4 மணிக்கு வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 10 மணி வரை வீட்ட விட்டு வெளியே வராதீங்க... இந்த மாவட்டங்ளுக்கு எல்லாம் வானிலை மையம் அலர்ட்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share