×
 

உக்ரைனுக்கு அடுத்து இந்தியா தான்!! உலக அளவில் ஆயுத இறக்குமதியில் 2ம் இடம்!! அதிகரிக்கும் படைபலம்!

ரஷியாவிடமிருந்து கொள்முதலைக் குறைத்துள்ள இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் பக்கம் திரும்பி உள்ளது.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, 2021-2025 காலகட்டத்தில் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதி நாடாக உருவெடுத்துள்ளது. உக்ரைன் முதலிடத்தில் உள்ளது. 

உலகளாவிய ஆயுத இறக்குமதியில் உக்ரைன் 9.7 சதவீதம், இந்தியா 8.2 சதவீதம் பங்கு பெற்றுள்ளன. முதல் ஐந்து இடங்களில் உக்ரைன், இந்தியா, சவுதி அரேபியா (6.8%), கத்தார் (6.4%), பாகிஸ்தான் (4.2%) ஆகிய நாடுகள் உள்ளன. இந்த ஐந்து நாடுகளும் உலக ஆயுத இறக்குமதியில் 35 சதவீதத்தை பெற்றுள்ளன.

இந்தியாவின் ஆயுத இறக்குமதி 2016-2020 உடன் ஒப்பிடுகையில் 4 சதவீதம் குறைந்துள்ளது. இது உள்நாட்டு ஆயுத உற்பத்தி அதிகரிப்பு, தாமதங்கள் போன்ற காரணங்களால் ஏற்பட்டது. ரஷ்யாவின் பங்கு கணிசமாக குறைந்துள்ளது. 

இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... தொகுதி பங்கீடு தீவிரம்... திமுக - சிபிஎம் பேச்சுவார்த்தை..!!

2011-15 இல் 70 சதவீதமாக இருந்த ரஷ்ய பங்கு, 2016-20 இல் 51 சதவீதமாகவும், 2021-25 இல் 40 சதவீதமாகவும் சரிந்துள்ளது. இதனால் இந்தியா அமெரிக்கா, பிரான்ஸ் (29 சதவீதம்), இஸ்ரேல் (15 சதவீதம்) போன்ற மேற்கத்திய நாடுகளை நோக்கி திரும்பியுள்ளது. பிரான்ஸ் இந்தியாவுக்கு இரண்டாவது பெரிய சப்ளையராக உருவெடுத்துள்ளது.

பாகிஸ்தான் தரப்பில் ஆயுத இறக்குமதி 2016-20 உடன் ஒப்பிடுகையில் 66 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனாவின் பங்கு 80 சதவீதமாக உள்ளது. இது இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றம், ஆப்கானிஸ்தான் சூழல் ஆகியவற்றால் ஏற்பட்டது.

உலக ஆயுத சப்ளையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது (42 சதவீதம்). அதன் ஏற்றுமதி 27 சதவீதம் அதிகரித்துள்ளது. பிரான்ஸ் இரண்டாவது (9.8 சதவீதம்), ரஷ்யா மூன்றாவது (6.8 சதவீதம், 64 சதவீதம் குறைவு), சீனா நான்காவது (14 சதவீதம் உலக பங்கு). உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளின் இறக்குமதி 210 சதவீதம் உயர்ந்து, ஐரோப்பா உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி பகுதியாக மாறியுள்ளது.

இந்த அறிக்கை உலக பாதுகாப்பு சூழலை பிரதிபலிக்கிறது. இந்தியா உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து இறக்குமதி சார்பைக் குறைக்க முயல்கிறது. ஆனால் பிராந்திய பதற்றங்கள் ஆயுத கொள்முதலை தொடர்ந்து அதிகரிக்கச் செய்கின்றன.

இதையும் படிங்க: 20 நாளைக்கு பிரச்னை இல்லை!! கேஸ் சிலிண்டர் கையிருப்பு உள்ளது!! தமிழக அரசு விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share