×
 

#BREAKING: பரபரக்கும் பீகார் தேர்தல் களம்... முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

பீகார் சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 தேதி அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பீகார் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் திருத்தப்பட்டியல் விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், பீகார் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் பீஹார் முதலமைச்சராக உள்ளார். இவர் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார். தேதற்போதுசிய ஜனநாயக கூட்டணி பீகார் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்று முன்னதாக அறிவித்தது.

இதனிடையே, பீகார் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பீகாரில் என்டிஏ கூட்டணி சார்பில் பாஜக மற்றும் நிதீஷ்குமாரின் ஜே.டி.யூ தலா 101 தொகுதிகளில் வேட்பாளர்களை போட்டியிட நிறுத்துவதாக அறிவித்திருந்தது. 

இதையும் படிங்க: சூடு பிடிக்கும் பீகார் தேர்தல் களம்... NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம்...!

பீகார் மாநில சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாட்னாவில் நடைபெற்ற இந்தியா கூட்டணி செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் - ஆர்.ஜே.டி தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: #BREAKING: அனல் பறக்கும் பீகார் தேர்தல் களம்… வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share