×
 

அடுத்த அடி.. பாகிஸ்தான் தபால்கள், பார்சல்களுக்கு தடை.. கேப் விடாமல் நொறுக்கும் இந்தியா!!

பாகிஸ்தானில் இருந்து அனைத்துவிதமான இறக்குமதிகளுக்கும் இந்தியா தடை விதித்த நிலையில் அங்கிருந்து வரும் கடிதங்கள், பார்சல்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து அனைத்துவிதமான இறக்குமதிகளுக்கும் இந்தியா தடை விதித்த நிலையில் அங்கிருந்து வரும் கடிதங்கள், பார்சல்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தரைவழி, வான்வழி என பாகிஸ்தானில் இருந்து வரும் கடிதங்கள், பார்சல்கள் ஊக்குவிக்கப்படாது என இந்திய தபால் துறை அதிரடியாக தெரிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியா அடுத்தடுத்து மாறுபட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தவுடன் பாகிஸ்தானிலிருந்து வரும் தபால், பார்சல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



கடந்த மாதம் 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர்.  இதனையடுத்து சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம், அட்டாரியில் உள்ள சோதனைச்சாவடி மூடல், சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த ஆலோசகர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும், இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் உள்ள முப்படை ஆலோசகர்களின் பதவிகள் ரத்து உள்ளிட்ட ஐந்து நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. அதனைத் தொடர்ந்து வான்வழி பயன்பாட்டில் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் வந்தவண்னம் உள்ளன.



அந்த வகையில் பாகிஸ்தானில் இருந்து நேரடியாக அல்லது மறைமுகமாக என அனைத்துவித இறக்குமதிகளுக்கும் தடை விதித்து இந்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்துள்ள உத்தரவில் பாகிஸ்தான் கொடியை தாங்கிய எந்தவொரு கப்பலும் இந்திய துறைமுகங்களுக்குள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தயாராகும் அடுத்த ஆப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி ஏற்படுத்த இந்தியாவின் மாஸ் பிளான்.!

இதையும் படிங்க: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வந்தால் என்ன நடக்கும்.? அல்லாவுக்குதான் தெரியும்.. ஃபரூக் அப்துல்லா ஆதங்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share