சீனா செல்லும் பிரதமர் மோடி!! 2019க்கு பிறகு நடக்கும் மாற்றம்!! அமெரிக்காவுக்கு எதிராக கைகோர்ப்பு!!
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. 2019 க்குப் பிறகு சீனாவிற்கு மோடி மேற்கொள்ளும் முதல் பயணமாகும்
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த ஐந்து வருஷமா நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விமான சேவைகள், அடுத்த மாதம் (செப்டம்பர் 2025) தொடங்கப்படலாம்னு ஒரு முக்கியமான தகவல் வெளியாகியிருக்கு. ப்ளூம்பெர்க் அறிக்கைப்படி, இந்திய அரசு, ஏர் இந்தியா, இண்டிகோ போன்ற விமான நிறுவனங்களை உடனடியா சீனாவுக்கு விமானங்களை இயக்க தயாராக இருக்கும்படி கேட்டுக்கிட்டிருக்கு.
இந்த முடிவு, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துற ஒரு பெரிய அடியாக பார்க்கப்படுது, குறிப்பா 2020-ல கல்வான் பள்ளத்தாக்கு மோதல், கோவிட்-19 தொற்றுநோய் ஆகியவற்றால் உறவு விரிசல் அடைஞ்ச பிறகு. இப்போ, அமெரிக்க அதிபர் டிரம்போட 50% வரி விதிப்பு, இந்தியாவையும் சீனாவையும் ஒரே பக்கம் நிறுத்தி, இந்த முடிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்னு சொல்றாங்க.
2020-ல் கோவிட்-19 பரவ ஆரம்பிச்சதால, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நேரடி விமானங்கள் நிறுத்தப்பட்டு, பயணிகள் ஹாங்காங், சிங்கப்பூர் வழியா பயணிக்க வேண்டியதா இருந்தது. அதே வருஷம், கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 20 இந்திய வீரர்களும், 4 சீன வீரர்களும் உயிரிழந்ததால, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமாகியது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள்.. எல்லையில் நீடித்த பதற்றம்.. சிதறிய தோட்டாக்கள்..
இந்தியா, 59 சீன மொபைல் ஆப்ஸ்களை தடை செஞ்சது, சீனா இதை “பாகுபாடு”னு குற்றம் சாட்டியது. இந்த பதற்றங்களுக்கு நடுவுல, விமான சேவைகள் முற்றிலும் நின்னு போச்சு. ஆனா, இப்போ சூழல் மாறி வருது. கடந்த ஜனவரில இருந்து இரு நாடுகளும் நேரடி விமானங்களை மீண்டும் தொடங்க பேச்சுவார்த்தை நடத்தி வருது. இதோட, சீன பயணிகளுக்கு இந்தியா மீண்டும் சுற்றுலா விசாவை கொடுக்க ஆரம்பிச்சிருக்கு, கைலாஷ் மானசரோவர் யாத்திரையும் மீண்டும் தொடங்கப்படுது.
இந்த மாத இறுதியில் (ஆகஸ்ட் 31 - செப்டம்பர் 1, 2025), சீனாவின் தியான்ஜின் நகரில் நடக்கப் போற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்லப் போறார். 2018-க்கு பிறகு இது அவரோட முதல் சீன பயணமாக இருக்கும். இந்த மாநாட்டின்போது, மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க வாய்ப்பு இருக்குன்னு பேசப்படுது.
இந்த சந்திப்புல, நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குறது உறுதியாகலாம், இதோட வர்த்தக உறவுகள், எல்லைப் பிரச்னைகள் பற்றியும் பேசப்படலாம்னு எதிர்பார்க்கப்படுது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் குவோ ஜியாகுன், “மோடியின் வருகையை வரவேற்கிறோம், இந்த மாநாடு ஒற்றுமை, நட்பு, பயனுள்ள முடிவுகளை கொண்டு வரும்”னு சொல்லியிருக்கார்.
இந்திய அரசு, ஏர் இந்தியா, இண்டிகோவை உடனடியா சீனாவுக்கு விமானங்களை இயக்க தயாராக இருக்க சொல்லியிருக்கு. இதுக்கு முன்னாடி, இந்தியாவில் இருந்து பீஜிங், ஷாங்காய், குவாங்ஜோ, குன்மிங் ஆகிய நகரங்களுக்கு வாரத்துக்கு ஒரு டஜன் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
இப்போ மீண்டும் இந்த பாதைகளை தொடங்க, விமான நிறுவனங்கள் விமான அட்டவணை, விமான நிலைய இடங்கள் (slots) ஆகியவற்றை தயார் செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. சீனாவோட ஏர் சைனா, சைனா சதர்ன், சைனா ஈஸ்டர்ன் நிறுவனங்களும் இதுல பங்கேற்கலாம்னு சொல்றாங்க. இந்த விமானங்கள் மீண்டும் ஆரம்பிச்சா, பயண நேரமும் செலவும் கணிசமா குறையும்னு எதிர்பார்க்கப்படுது.
இந்தியாவும் சீனாவும் உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடுகள். இவங்களுக்கு இடையேயான நேரடி விமானங்கள், சுற்றுலா, வர்த்தகம், கலாசார பரிமாற்றத்தை பெரிய அளவில் மேம்படுத்தும். இப்போ டிரம்ப் இந்தியாவுக்கு 50% வரி விதிச்சிருக்குற நிலையில், இந்தியாவும் சீனாவும் இணைந்து BRICS கூட்டணி மூலமா இதுக்கு பதிலடி கொடுக்கலாம்னு பேச்சு இருக்கு. சீன தூதர் ஜு ஃபெய்ஹாங், டிரம்பை “புலி”னு விமர்சிச்சு, இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிச்சிருக்கார். இது, இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற ஒரு வாய்ப்பை உருவாக்குது.
இந்தியா-சீன நேரடி விமானங்களோட மறுதொடக்கம், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துற ஒரு முக்கிய அடியாக இருக்கும். மோடியின் சீன பயணமும், டிரம்போட வரி விதிப்புக்கு எதிரான பேச்சுவார்த்தைகளும், இந்த முடிவுக்கு முக்கியத்துவம் கொடுக்குது.
இதையும் படிங்க: பாகிஸ்தானின் ISI-க்கு உளவு பார்த்த வாலிபர்.. தட்டித்தூக்கிய உளவுத்துறை.. விசாரணையில் வெளியான பகீர்..