×
 

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு ஏன்?!! மத்திய அரசு தெளிவான விளக்கம்!

உலகளாவிய எரிசக்தி விலைகளிலிருந்து நுகர்வோரை பாதுகாப்பதற்காகவே பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைந்ததாக மத்திய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

புதுடெல்லி: உலகளாவிய எரிபொருள் விலை உயர்வுக்கு மத்தியில், இந்திய மக்களை பாதுகாக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்ட அறிக்கையில் முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் உலக அளவில் கச்சா எண்ணெய் விலையை பெரிதும் உயர்த்தியுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 70 டாலரிலிருந்து 122 டாலர் வரை உயர்ந்துள்ளது. இதனால் உலக நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 30 முதல் 50 சதவீதம் வரையிலும், வட அமெரிக்காவில் 30 சதவீதம், ஐரோப்பாவில் 20 சதவீதம், ஆப்பிரிக்க நாடுகளில் 50 சதவீதம் வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மக்கள் இத்தகைய விலை உயர்வால் பாதிக்கப்படாமல் இருக்க, மத்திய அரசு தனது நிதிச்சுமையை ஏற்றுக்கொண்டு கலால் வரியை குறைக்க முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: ஈரான் வைக்கும் அடுத்த ஆப்பு! நடுங்கும் உலக நாடுகள்!! பாப் அல் மண்டப் ஜலசந்தியையும் மூடுவதாக மிரட்டல்!

அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாட்டில் எரிபொருள் விநியோகம் எவ்வித தடங்கலும் இன்றி தொடர்வதை அரசு உறுதி செய்துள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஏற்படும் எந்த சவாலையும் எதிர்கொள்ள முழுமையாக தயாராக இருக்கிறோம்” என்றார்.

ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடங்கிய கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு மக்களை பாதுகாக்கும் கொள்கையை உறுதியாக கடைப்பிடித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். இப்போதும் சர்வதேச விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிலையங்கள் வரியை செலுத்த வேண்டும்.

ஊரடங்கு வதந்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று தெளிவுபடுத்திய அமைச்சர், “இத்தகைய வதந்திகளை பரப்புவது பொறுப்பற்ற செயல். அமைதியாகவும், ஒற்றுமையுடனும் இருப்போம்” என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்த முடிவு நுகர்வோருக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்த துணிச்சலான முடிவுக்கு அமைச்சர் புரி நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல் தொடரும்!!! ஏவுகணை திட்டத்தை நசுக்குவோம்!! நெதன்யாகு கோவம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share