இந்தியாவின் கட் அண்ட் கறாரான 3 கன்டிஷன்கள்... விழி பிதுங்கி நிற்கும் பாகிஸ்தான்...!
இந்தியா - பாகிஸ்தான் இடையில் பேச்சுவார்த்தை நடந்தால் என்னென்ன மாதிரியான கன்டிஷன்களை இந்தியா முன்வைக்கும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
எல்லையில் போர் பதற்றத்தை தணிக்கும் வகையில் தாக்குதல்களை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். அந்த நாட்டினுடைய ராணுவத் தலைவர் இந்திய ராணுவத்திடம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. அப்போது இந்தியாவின் தாக்குதல்களால் பாகிஸ்தான் மிக மோசமான நிலையில் இருப்பதால் பிரச்சனைகளை தவிர்க்கவும், கூடுதல் பாதிப்புகளை தடுக்கவும் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராகி வருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற துல்லிய தாக்குதலை நடத்தி, பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா தும்சம் செய்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த 3 இரவுகளாக பொதுமக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் அனைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதகளை இந்தியா முறியடித்த நிலையில், கராச்சியில் உள்ள அதன் வான் பாதுகாப்பு அமைப்பையும் சிதறடித்துள்ளது.
இதையும் படிங்க: ப்ளீஸ் நிறுத்துங்க... அடிக்கிற அடி தாங்க முடியல... இந்தியாவிடம் கதறும் பாகிஸ்தான்...!
இதனால் அடுத்தடுத்து பின்னடவை சந்தித்து வந்த பாகிஸ்தான் தற்போது இந்தியாவை நோக்கி வெள்ளைக்கொடி காட்ட ஆரம்பித்துள்ளது. டெல்லியில் இருக்கக்கூடிய பாதுகாப்பு துறை குறிப்பாக ராணுவத்தினுடைய அதிகாரிகளுடன், பாகிஸ்தான் நாட்டினுடைய அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு தயாராக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து, ஈரான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இருநாட்டு ராணுவ அதிகாரிகளையும், முக்கிய அமைச்சர்களையும் தொடர்பு கொண்டு தாக்குதலை நிறுத்தும் படியும், பேச்சுவார்த்தையில் ஈடுபடும் படியும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோலுடன் அந்நாட்டினுடைய பாதுகாப்பு ஆலோசகர் பேசியதாக இரு தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானுடைய துணை பிரதமர் கூறியிருந்த கருத்தை அந்த நாட்டினுடைய ராணுவமே நேற்று அதிகாரப்பூர்வமாக மறுத்திருந்தது. யாரும் இந்தியாவுடன் தற்பொழுது வரை அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து பேசவில்லை என்று கூறி வந்த நிலையில், தற்பொழுது இந்தியாவுடனான பேச்சு வார்த்தைக்கு தயாராக உள்ளதாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து அழைப்பானது வந்திருக்கிறது. இந்தியா தரப்பிலிருந்து இதற்கு எவ்வாறு பதில் கூற போகிறார்கள், பேச்சு வார்த்தைக்கு தயாராக இருக்கிறார்களா? அவ்வாறு பேச்சு வார்த்தைக்கு செல்லும் பட்சத்தில் பல்வேறு நிபந்தனைகளையும் இந்தியா பாகிஸ்தானுக்கு விதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை பாகிஸ்தான் - இந்தியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றால் இந்தியா என்னென்ன மாதிரியான கன்டிஷன்களை முன்வைக்கக்கூடும் என பார்க்கலாம்.
இந்த பேச்சுவார்த்தையின் போது மிக முக்கியமான ஒன்றான சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த சில திருத்தங்களை இந்தியா பாகிஸ்தானிடம் முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர் மின் நிலையங்கள் கட்டுவதற்காக இந்தியா திட்டமிட்டு வருவதால், அதுகுறித்து பல்வேறு திருத்தங்கள் அடிப்படையில் உடன்படிக்கை கோர வாய்ப்புள்ளது. அடுத்ததாக எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கக்கூடிய பயங்கரவாத முகாம்களை தகர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்தியா முன்வைக்கும் எனக்கூறப்படுகிறது.
பாகிஸ்தானுடைய அதிகாரப்பூர்வ செக் போஸ்ட்கள் அமைந்திருக்கக்கூடிய எல்லை பகுதிகளில் லஷ்கர் இ தொய்பா, ஜெயஸ்ரீ முகம்மது, ஹிஸாமுதீன் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் இருப்பதால் அதனை அழிக்கக்கோரும் என்றும், இந்தியாவின் பட்டியலில் உள்ள முக்கிய பயங்கரவாதிகளை விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என டிமாண்ட் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன.
இதையும் படிங்க: வாட்டர் வார்; பாக்லிஹார் அணையை திறந்துவிட்ட இந்தியா... திணறும் பாகிஸ்தான்...!