×
 

அமிர்தசரஸிலிருந்து அடிச்சா லாகூர் காலி... அதி பயங்கர ஆயுதத்தை களமிறக்கும் இந்தியா - கதி கலங்கும் பாக்.!

ATAGS (Advanced Towed Artillery Gun System) என்று அழைக்கப்படும் மிகவும் வலிமையான மற்றும் ஆபத்தான பீராங்கியை வடிவமைத்துள்ளது. 

இந்தியா தற்போது உலகிலேயே மிக மிக சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன்றினை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது பாகிஸ்தானுக்கு பேரிடியாக மாறியுள்ளது.  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இரண்டு இந்திய நிறுவனங்களான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் மற்றும் பாரத் ஃபோர்ஜ் ஆகியவற்றுடன் இணைந்து , ATAGS (Advanced Towed Artillery Gun System) என்று அழைக்கப்படும் மிகவும் வலிமையான மற்றும் ஆபத்தான பீராங்கியை வடிவமைத்துள்ளது. 

307 அட்வான்ஸ்டு டோவ்டு ஆர்ட்டிலரி கன் சிஸ்டம்ஸ் (ATAGS) மற்றும் 327 ஹை-மொபிலிட்டி 6×6 கன் டோவிங் வாகனங்களை வாங்குவதற்காக இந்திய அரசாங்கம் பாரத் ஃபோர்ஜ் லிமிடெட் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனங்களுடன் ₹6,900 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

உலகிலேயே சக்தி வாய்ந்த பீரங்கிகளில் ஒன்றான இது, 48 கிலோ மீட்டர் வரை குறிவைத்து தாக்கக்கூடியது. அதாவது இந்தியாவின் அமிர்தசரஸில் இருந்து பாகிஸ்தானின் லாகூரை நேரடியாக அட்டாக் செய்ய முடியும். ஏனெனில் இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட தூரம் வெறும் 55 கிலோ மீட்டர் மட்டுமே. 155 மில்லி மீட்டர் காலிபர் மற்றும் 52 கலிபர் நீளம் கொண்ட பீப்பாய் கொண்டது வலியான துப்பாக்கியைக் கொண்டது. இது பர்ஸ்ட் ஃபயரிங் பயன்முறையில் 2.5 நிமிடங்களுக்குள் 5 சுற்றுகளைச் சுட முடியும்.

இதையும் படிங்க: மாணவர்களுக்கு ஃப்ரீ லேப்டாப்.. அப்ளிகேஷன் போட்ட 3 நிறுவனங்கள்.. தமிழக அரசின் அடுத்த மூவ்!

நவீன போருக்கு ஏற்றார் போல் வெடிமருந்துகளை தானியங்கி முறையில் வேகமாகவும், துல்லியமாகவும் கையாளும். ஜிபிஎஸ் மற்றும் தீ கட்டுப்பாடு ஆகியவற்றிற்கான மின்னணு தொகுப்பைக் கொண்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சகம் 307 ATAGS துப்பாக்கிகளை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அவற்றின் இறுதி சோதனைக்குப் பிறகு விரைவில் அவை பயன்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: பிரதமருக்கு வெள்ளை குடை... தமிழ்நாட்டில் வீராப்பு! யாரு கூட கூட்டணி வச்சா உங்களுக்கென்ன? இபிஎஸ் ON FIRE!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share