தரமில்லாத மருந்துகள்!! காய்ச்சல், சளிக்கு சாப்பிட்ட மருந்துகளில் போலி!! மக்களே உஷார்!!
'மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் நடத்திய பரிசோதனையில், 211 மருந்துகள் தரமற்றதாகவும், ஐந்து மருந்துகள் போலியாகவும் இருந்தன' என, மத்திய அரசின் மருந்து தரக் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
நாட்டில் விற்கப்படும் மருந்துகள் தரம் குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 1,000-க்கும் மேற்பட்ட மருந்து மாத்திரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அவற்றில் காய்ச்சல், சளி, கிருமி தொற்று, ஜீரணப் பிரச்சினைகளுக்கு பயன்படும் 211 மருந்துகள் தரமற்றவையாகவும், 5 மருந்துகள் போலியானவையாகவும் இருந்தன. இந்த விபரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CDSCO) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (cdsco.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இதைப் பார்வையிடலாம்.
மத்திய மற்றும் மாநில அளவில் மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள், அனைத்து வகை மருந்துகளையும் தொடர்ந்து சோதனை செய்கின்றன. தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டவுடன், அவற்றை உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த சோதனைகள், மக்கள் உயிர்களை காப்பாற்றுவதற்கான முக்கிய படியாகக் கருதப்படுகின்றன. ஆனால், தரமற்ற மருந்துகள் பரவுவது, மருத்துவத் துறையில் பெரும் சவாலாக உள்ளது.
இதையும் படிங்க: இளம் வயதினரை கவர்ந்த டாப் 10 சோசியல் மீடியா ஆப்ஸ்..!! லிஸ்ட்ல எது முதல்ல தெரியுமா..??
தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிப்’ என்ற மருந்தை உட்கொண்டதால், மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழக அரசு அக்டோபரில் அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தி, மருந்து தரமற்றது என்று அறிவித்தது. ஆனால், இந்தத் தகவலை மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.
இதன் காரணமாக, தரமற்ற மருந்துகளின் விபரங்களை வழங்காத மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெற்றுள்ளது. தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளிடம் இது குறித்து கேட்கப்பட்டபோது, உரிய பதில் கிடைக்கவில்லை.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு, மருந்து தரக் கட்டுப்பாட்டில் மாநிலங்களின் பொறுப்பின்மையை வெளிப்படுத்தியுள்ளது. தரமற்ற மருந்துகள் பரவுவதால், மக்கள் உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும். பொதுமக்கள், மருந்துகளை வாங்கும்போது அவற்றின் தரச் சான்றிதழை சரிபார்க்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். மத்திய வாரியம், இந்த விஷயத்தில் தொடர்ந்து கண்காணிப்பதாகவும், தரமற்ற நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனை விதிப்பதாகவும் உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க: 14 சிறார் உட்பட 261 பேரை சீரழித்த காம கொடூரன்!! சோஷியல் மீடியாவில் வலை!! 1,700 ஆபாச படங்கள்!!