#BREAKING: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி..!
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது.
முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்து இருந்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
எனவே இங்கிலாந்து வெற்றி பெற 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்று முடிந்தது.
இறுதியில், இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. இந்தியாவின் வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இங்கிலாந்து எதிரான விறுவிறுப்பான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா திரில் வெற்றி பெற்றுள்ளது.
ஜேமி ஓவர்டன் இரண்டு பவுண்டரிகளுடன் தொடக்கத்தை துவக்கினார், இரண்டாவது பந்து சற்று கோடுகள் நிறைந்ததாக இருந்தாலும், 8 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ஆனால் பின்னர் முகமது சிராஜ் ஒரு அற்புதமான ஸ்பெல்லுடன் பந்து வீசி, ஜேமி ஸ்மித் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகிய இருவரையும் வீழ்த்தினார். முகமது சிராஜ் மிகவும் சிறப்பாக பந்து வீசிய நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.