×
 

இந்தியாவில் தங்கம் வாங்குவது குறைந்தது! உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்தியாவில் தங்கத்தின் தேவை 6 சதவீதம் சரிவு அடைந்துள்ளது. ஆனால் விற்பனை மதிப்பு ரூ.1.98 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தங்கம் வாங்கும் அளவு குறைந்திருந்தாலும், அதன் விற்பனை மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள 2026 ஏப்ரல்–ஜூன் காலாண்டு அறிக்கையின்படி, தங்கத்தின் மொத்த தேவை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 6 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்ததால், மொத்த விற்பனை மதிப்பு ரூ.1.98 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

அறிக்கையின்படி, 2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த தங்கத் தேவை 131.4 டன்னாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 139.7 டன்னாக இருந்தது. பருவகால விற்பனை மந்தநிலை, இறக்குமதி சுங்க வரி உயர்வு மற்றும் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்ற அரசின் வேண்டுகோள் போன்ற காரணங்களால் தங்கத்தின் தேவை குறைந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்ததால், விற்பனை மதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ரூ.1.32 லட்சம் கோடியாக இருந்த மொத்த விற்பனை மதிப்பு, இந்த ஆண்டு சுமார் 50 சதவீதம் உயர்ந்து ரூ.1.98 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதனால், குறைவான அளவில் தங்கம் விற்பனையானாலும், அதன் மதிப்பு சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: சொகுசு கார் ஜாம்பவானுக்கே சிக்கல்?! BMW ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 8,000 ஊழியர்கள் பணிநீக்கம்!

தங்க நகைகளின் தேவை 15 சதவீதம் குறைந்து 75.1 டன்னாக பதிவாகியுள்ளது. இருப்பினும், விலை உயர்வு காரணமாக நகை விற்பனையின் மொத்த மதிப்பு 34 சதவீதம் அதிகரித்து ரூ.1.13 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அட்சய திருதியை போன்ற பண்டிகைகளில் மக்கள் தங்கம் வாங்கும் ஆர்வம் தொடர்ந்தாலும், அதிக விலையால் குறைந்த எடை மற்றும் குறைந்த காரட் நகைகளை அதிகம் தேர்வு செய்ததாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

மறுபுறம், முதலீட்டு நோக்கில் வாங்கப்படும் தங்க கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களின் தேவை 9 சதவீதம் அதிகரித்து 50.3 டன்னாக உயர்ந்துள்ளது. கோல்டு இ.டி.எப். முதலீடும் 49 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக மக்கள் இன்னும் நம்பி வருவதை வெளிப்படுத்துகிறது. அதேநேரத்தில், இந்தியாவின் தங்க இறக்குமதி 23 சதவீதம் குறைந்து 98.1 டன்னாகவும், பழைய தங்க மறுசுழற்சி பயன்பாடும் 17 சதவீதம் குறைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தம்! ஒரே நாளில் சரிந்த கச்சா எண்ணெய் விலை! உலக பொருளாதாரத்திற்கு நிம்மதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share