×
 

இனி இந்தியாவில் சிப்-உடன் கூடிய இ-பாஸ்போர்ட்.. இந்த மாதத்தில் அறிமுகம்!

இந்தியாவில் இந்த மாதம் முதல் சிப் உடன் கூடிய இ-பாஸ்போர்ட்களை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவில் இந்த மாதம் முதல் சிப் உடன் கூடிய இ-பாஸ்போர்ட்களை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பாஸ்போர்ட் சம்மந்தமான பல்வேறு நடைமுறைகள் முழுவதையும் இணையவழியில் மேற்கொள்வதற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தன. குறிப்பாக, 'மைக்ரோ சிப்' உடன் கூடிய இ-பாஸ்போர்ட் வழங்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. அந்தல் பணிகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த மாதம் நாடு முழுவதும் சிப் உடன் கூடிய இ-பாஸ்போர்ட்களை அறிமுகப்படுத்தப்பட உள்ளன.



வழக்கமான பாஸ்போர்ட் ஆவணத்தை சுமந்துகொண்டு வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மாறாக பழைய பாஸ்போர்ட்டை கொண்டு அதன் டிஜிட்டல் வடிவ பிரதியை பெற்றுக்கொண்டு, மிக சுலபமாக பிற நாட்டுக்கு பயன்படும் முறைதான் இ-பாஸ்போர்ட் திட்டம். இது உலகிலேயே முதல்முறையாக 2023 ஆகஸ்ட் மாதத்தில், பின்லாந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

டிஜிட்டல் பாஸ்போர்ட் பிரதியை ஆண்ட்ராய்டு / ஆப்பிள் போன்ற  கைபேசியில் வைத்துக்கொண்டு, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளுக்கு பின்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் சென்றனர். இந்த வகையான டிஜிட்டல் பாஸ்போர்ட் கட்டமைப்பை அமெரிக்கா, தென் கொரியா, போலாந்து, பிரிட்டன் ஆகியவை உருவாக்கி வருகின்றன

இதையும் படிங்க: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வந்தால் என்ன நடக்கும்.? அல்லாவுக்குதான் தெரியும்.. ஃபரூக் அப்துல்லா ஆதங்கம்!

.இந்நிலையில் இந்திய அரசும் இ-பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்யும் முயற்சியில் இறங்கியது. இந்தியாவில் 'மைக்ரோ சிப்' பதிக்கப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகளை  அறிமுகம் செய்ய அரசு திட்டமிட்டது. இது முழுக்க பேப்பர் அட்டை போல இருக்கும், ஆனால், இதில் RFID சிப் பொருத்தப்பட்டிருக்கும். பாஸ்போர்ட் அட்டையின் பின் பகுதியில் ஒரு நுண்ணிய ஆன்டெனாவும் இருக்கும்.



இந்த சிப்பில் முக்கியமான கைரேகை, முக அடையாளம் உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்கள்  இருக்கும். பயண தகவல்களை இதில் பதிவு செய்வதும் வேகமாக எளிமையாக நடைபெறும். அதேபோல விமான பயணிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இதனால் நிறைய நேரம் மிச்சமாகும். இது மிகவும் பாதுகாப்பானது. இதை அவ்வளவு எளிதில் போலியாக தயாரித்துவிட முடியாது.

சிப் அடிப்படையிலான இந்த பயோமெட்ரிக் மின்-பாஸ்போர்ட்களை தற்போது பணிகள் முடிந்து தொடங்கப்பட உள்ளது. இந்த மாதம் முதல் முழுமையாக இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த பாஸ்போர்ட்டுகள் குடியேற்றத்தை விரைவுபடுத்தும் மற்றும் மோசடிகளைத் தடுக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: சும்மா விட மாட்டோம்; வேரோடு அழிப்போம்... பயங்கரவாதிகளுக்கு பீதியை கொடுத்த அமித்ஷா!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share