×
 

"ஈரான் செல்ல வேண்டாம்... இந்தியர்களுக்கு மத்திய அரசின் அவசர எச்சரிக்கை!"

ஈரான் அல்லது வளைகுடா நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள், தங்களது விமான நிறுவனங்களின் சமீபத்திய அறிவிப்புகளை முன்கூட்டியே சரிபார்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு புதிய பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. ஈரானுக்கு செல்லத் திட்டமிட்டுள்ள இந்தியர்கள் தங்களது பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என்றும், தற்போது ஈரானில் தங்கியுள்ள இந்தியர்கள் சூழ்நிலையை மதிப்பீடு செய்து, கிடைக்கும் விமான சேவைகள் மூலம் தற்காலிகமாக அந்நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. அண்மைய நாட்களில் தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளது. குறிப்பாக ஹர்முஸ் ஜலசந்தி பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா மற்றும் ஈரான் ஒருவரையொருவர் குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து, டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் திருத்தப்பட்ட பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது ஈரானுக்கு எந்த நோக்கத்திற்காகவும் பயணம் செய்வதை ஒத்திவைக்குமாறும், அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்தியர்கள் தங்களது விவரங்களை டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்கா-ஈரான் மோதல் தீவிரம்... 7 நாட்களாக ஓயாத தாக்குதல்.. கவலையில் உலக நாடுகள்.!

போர் பதற்றம் காரணமாக சில சர்வதேச விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, ஈரான் அல்லது வளைகுடா நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள், தங்களது விமான நிறுவனங்களின் சமீபத்திய அறிவிப்புகளை முன்கூட்டியே சரிபார்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு சூழல் தொடர்ந்து மாறி வருவதால், அப்பகுதியில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள், இந்திய வெளியுறவுத்துறை மற்றும் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களை தொடர்ந்து கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: 6வது நாளாக அடி பொளக்கும் அமெரிக்கா... ஈரான் மீது சரமாரி குண்டுமழை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share