×
 

அய்யா எங்களை விட்டுட சொல்லுங்க... இந்தியாவால் நடுக்கம்... அமெரிக்காவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்..!

டிரம்ப் ஒரு மத்தியஸ்தராக செயல்பட்டு நிரந்தர தீர்வை நோக்கி முன்முயற்சி எடுக்க வேண்டும்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான பதற்றம் மீண்டும் ஒரு ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான இராணுவ நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான், அமெரிக்காவிடம் மன்றாடத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் தூதர் ரிஸ்வான் சயீத் ஷேக், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் உலகம் அணு ஆயுதப் போரிலிருந்து காப்பாற்றப்படும் என நம்பப்படுகிறது.

அமெரிக்க பத்திரிகையான நியூஸ் வீக்கிற்கு பாகிஸ்தான் தூதர் ரிஸ்வான் சயீத் ஷேக் அளித்த பிரத்யேக நேர்காணலில், ''பாகிஸ்தான் தூதர் காஷ்மீர் உலகின் மிகவும் உணர்ச்சிகரமான வெடிப்புப் புள்ளி. அங்கு எந்த நேரத்திலும் அணு ஆயுதப் போர் வெடிக்கக்கூடும். இந்த பகுதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மட்டுமல்ல, சீனாவும் ஒரு அணு ஆயுத சக்தி நாடு. இதுபோன்ற சூழ்நிலையில், பதற்றம் மேலும் அதிகரித்தால், அதன் விளைவுகள் உலக அளவில் பயங்கரமாக இருக்கும். டிரம்ப் ஒரு மத்தியஸ்தராக செயல்பட்டு நிரந்தர தீர்வை நோக்கி முன்முயற்சி எடுக்க வேண்டும்'' என்று தூதர் விடுத்தார்.

இதையும் படிங்க: மூடப்பட்ட பள்ளிகள்; அவசரமாக மக்கள் வெளியேற்றம்... உச்சக்கட்ட பதற்றத்தில் பாகிஸ்தான்!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில், இந்தியா, பாகிஸ்தானைக் குற்றம் சாட்டியுள்ளது. அதற்கு பதிலடி கொடுக்க அதன் படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளது. அணு ஆயுதப் போர் அச்சத்தை வெளிப்படுத்துவதன் மூலம் பாகிஸ்தான் தன்னை பாதிக்கப்பட்ட நாடாகக் காட்ட முயன்றது. பாகிஸ்தான் இப்போது புவிசார் அரசியலில் அல்ல, புவிசார் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறது. இந்நிலையில் எந்த இராணுவ பதற்றத்தாலும் எந்த நன்மையும் கிடைக்காது என்றும் தூதர் ஷேக் கூறியுள்ளார். பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக உயர முயற்சிக்கிறது என்றும், அதற்காக 'அமைதியான வழி' அவசியம் என்றும் அவர் கூறினார். இதனால்தான், எந்தவொரு 'சாகச இராணுவ உத்தியிலிருந்தும்' விலகி இருக்க பாகிஸ்தான் விரும்புகிறது.

இந்திய-பாகிஸ்தான் பதற்றம் அனைத்திற்கும் காஷ்மீர் பிரச்சினையே காரணம் என்று பாகிஸ்தான் தூதர் கூறி, இந்தப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க டிரம்ப் நிர்வாகம் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாத வரை, இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் சாதாரணமாக இருக்க முடியாது என்றும் அவர் கூறினார். பாகிஸ்தான் ஒரு 'சிறிய நாடு' என்றும், அது 'கண்ணியத்துடன் அமைதியை' விரும்புகிறது என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: உச்சத்தில் போர் பதற்றம்.. முக்கிய இடங்களில் அபாய சைரன்.. இந்தியாவால் அலறும் பாகிஸ்தான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share