கெத்துக் காட்டினீயே ராஜா... கம்பீரம் என்னாச்சு கவாஜா..? இந்தியாவிடம் உல்டாவாக மாறிய பாக்., அமைச்சர்..!
இரண்டு அல்லது மூன்று நாட்களில் போர் வெடிக்கும் என்று நான் கூறவில்லை. ஆனால் நிலைமை தீவிரமானது.
இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில், பாகிஸ்தான் தலைவர்கள் கோபமடைந்து தாங்கள் பேசிய கருத்துக்களை மாற்றி சொல்ல ஆரம்பித்துள்ளனர். இந்தியாவுடனான போர் தொடர்பான தனது சமீபத்திய கருத்துக்களை தெளிவுபடுத்தும் போது, பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், தனது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக பல்டியடித்துள்ளார்.
இந்தியாவுடனான போர் நிச்சயம் என்று சர்வதேச ஊடக அமைப்புக்கு அளித்த பேட்டியில் கவாஜா ஆசிப் கூறியிருந்தார். இந்தியாவுடனான பாகிஸ்தானின் சமீபத்திய பதற்றம் குறித்து அவர் இதனைத் தெரிவித்து இருந்தார். தற்போது இதனை தெளிவுபடுத்தியுள்ள அவர், "தற்போதைய சூழ்நிலையில் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்கள் மிகவும் முக்கியமானவை என்று நான் பதிலளித்தேன். இரண்டு அல்லது மூன்று நாட்களில் போர் வெடிக்கும் என்று நான் கூறவில்லை. ஆனால் நிலைமை தீவிரமானது. போர் அச்சுறுத்தல் உண்மையானது என்று நான் நிச்சயமாகக் கூறினேன்."
இதையும் படிங்க: பஹல்காம் தீவிரவாத தாக்குதல்.. சர்வதேச விசாரணை கேட்கும் பாகிஸ்தான்..!
பாகிஸ்தான்-இந்திய எல்லையின் இருபுறமும் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், இப்பகுதி ஒரு பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. நாங்கள் மனதளவில் போருக்குத் தயாராக இருக்கிறோம். எங்கள் மூன்று ஆயுதப் படைகளும் நாட்டைப் பாதுகாக்கத் தயாராக உள்ளன" என்று அவர் கூறினார்.
பாகிஸ்தான் மீது போர் திணிக்கப்பட்டால், நாடு வலுவான பதிலடி கொடுக்கும். எங்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் திறன் உள்ளது, அதைச் செய்ய நாங்கள் தயங்க மாட்டோம்" என்று அவர் எச்சரித்தார்
.
இந்தியாவின் தாக்குதல் குறித்த பயம் பாகிஸ்தான் தலைவர்களைச் சூழ்ந்துள்ளது. அவர்கள் எந்த நேர்காணல், நிகழ்ச்சிக்குச் சென்றாலும், அவர்களிடம் போர் குறித்த கேள்விகள் கேட்கப்படுகின்றன. பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்ல, பாகிஸ்தான் தலைவர்களிடமும் போர் பயம் தெளிவாகத் தெரிகிறது. ராணுவத் தளபதி ஆசிப் முனீர், பிலாவல் பூட்டோ உள்ளிட்ட பல தலைவர்களும் அதிகாரிகளும் தங்கள் குடும்பத்தினரை நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளனர்.
இதையும் படிங்க: அமெரிக்கா, பிரிட்டனுக்கு பாகிஸ்தான் செய்த 'அழுக்கு வேலை..'! அம்பலப்பட்ட இரட்டை வேஷம்..!