#BIG BREAKING: சமரசமற்ற நிலைப்பாட்டை இந்தியா கடைபிடிக்கும்.. உடனடி போர் நிறுத்தம் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு..!
இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தப்படுவதாக இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது..
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பாகிஸ்தான் நடத்தி வரும் ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பல இடங்களை குறித்து இந்தியா இன்று காலை தாக்குதல் நடத்தியது. மொத்தம் எட்டு இடங்களில் இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தி ராணுவ முகாம்களை குறி வைத்தது. இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட நிலையில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அதனை உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ டவடிக்கையை நிறுத்துவது குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது எனவும் அது தொடர்ந்து அவ்வாறு செய்யும் என்றும் கூறினார்.